மகா சிவராத்திரி 2023: சிவபெருமானின் மகிமையை பெற எப்போது பூஜை, விரதம் கடைபிடிக்க வேண்டும்? முழுவிவரம்!

By Ma RiyaFirst Published Feb 1, 2023, 2:22 PM IST
Highlights

Maha Shivaratri 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்தாண்டு மகா சிவராத்திரியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பான விஷயம் ஒன்று நிகழவுள்ளது. 

பஞ்சாங்கத்தின்படி ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ சதுர்தசியன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் சிவனையும் பார்வதியையும் வழிபடுபவர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். சிவராத்திரி தினத்தில் நோன்பிருந்து சிவபெருமானை வழிபடுபவர்களின் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

மகா சிவராத்திரி, பிப்ரவரி 18ஆம் தேதி இரவு 08:03 மணிக்குத் தொடங்கி பிப்ரவரி 19ஆம் தேதி அன்று மாலை 04:19 மணிக்கு நிறைவடைகிறது. ஆண்டுக்கு 12 முறை சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனை மாத சிவராத்திரி என அழைப்பர். மாசியில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்பர். வருடம் முழுக்க வரும் சிவராத்திரியை வழிபடாவிட்டாலும் இந்த ஒரு நாள் வழிபட்டால் அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் இரவில் தூங்காமல் கண் விழித்து மக்கள் பிரார்த்தனை செய்வர். 

மகா சிவராத்திரியின் பூஜை நேரங்கள் 

  • முதல் மணிநேர பூஜை நேரம்: பிப்ரவரி 18 அன்று காலை 06:41 முதல் இரவு 09:47 மணி வரை 
  • இரண்டாம் மணி பூஜை நேரம்: இரவு 09.47 முதல் நள்ளிரவு 12.53 மணி வரை
  • மூன்றாம் மணிநேர பூஜை நேரம்: பிப்ரவரி 19ஆம் தேதி அன்று பிற்பகல் 12.53 முதல் மாலை 03.58 மணி வரை
  • நான்காம் மணி நேர பூஜை நேரம் : பிப்ரவரி 19ஆம் தேதியில் 03:58 முதல் இரவு 07:06 மணி வரை
  • நோன்பு இருக்க வேண்டிய நேரம் பிப்ரவரி 19ஆம் தேதி காலை 06.11 முதல் பிற்பகல் 02.41 வரையிலும் நோன்பு இருக்கலாம். 

ஏன் இந்தாண்டு சிறப்பு வாய்ந்தது? 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 30 வருடங்களுக்கு பின்னர் கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். அது மட்டுமின்றி பிப்ரவரி 13ஆம் தேதியன்று சூரியன் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். மகா சிவராத்திரியில் சனியும், சூரியனும் கும்ப ராசியில் வீற்றிருப்பார்கள். இதனுடன், சுக்கிரன் அதன் உயர்ந்த ராசியான மீனத்தில் அமர்ந்துள்ளது மற்றொரு சிறப்பு. அது மட்டுமின்றி இந்த நன்னாளில் பிரதோஷ விரதத்தின் நிகழ்வும் உள்ளது. இப்படியாக இந்த முறை மகா சிவராத்திரியின் சிறப்புகள் அதிகரித்துள்ளன. 

இதையும் படிங்க: காவி நிறத்தில் பூணூலோடு 'பிராமின்ஸ் குக்கீஸ்' பிஸ்கெட்டில் சாதியை தூக்கி பிடிக்கணுமா? கொதிக்கும் நெட்டிசன்கள்

எப்படி வழிபட வேண்டும்? 

மகா சிவராத்திரி வழிபாடு நடத்தும் தினத்தில் அதிகாலையில் குளித்து சுத்தமான ஆடைகளை அணியுங்கள். பின்னர் சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு கரும்புச்சாறு, பால், நெய் போன்றவைகளால் மனதுருகி அபிஷேகம் செய்யுங்கள். இதனுடன் துளசி, ஜாதிக்காய், தாமரை மொட்டு, பழங்கள், இனிப்பு வகைகள், இனிப்பு சுவையுடைய பானம், தூபம், தட்சிணை ஆகியவைகளையும் சிவனுக்கு காணிக்கையாக்குங்கள். இதன் பிறகு சிவனுக்கான மந்திரங்களை சொல்லுங்கள். 

முக்கியத்துவம் 

மகாசிவராத்திரி நாளில், சிவபெருமானை நினைத்து பக்தர்கள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். இந்த விரதத்தால் பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெறலாம். இந்த நாளில் விரதம் இருக்கும் பெண்களுக்கு விரும்பிய வரன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த விரதத்தை முழுமனமோடு செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். முக்தி அடைய விரும்புபவர்கள் இந்த விரதத்தை கட்டாயம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. 

இதையும் படிங்க: பொட்டுக்கடலையில் பொதிந்துள்ள நன்மைகள் தெரியுமா? தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டால் போதும்..!

click me!