150 ஆடு, 500 கோழி; கம கம பிரியாணி வாசனையுடன் அரங்கேறிய முனியாண்டி கோவில் திருவிழா

By Velmurugan s  |  First Published Jan 28, 2023, 11:35 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 88வது ஆண்டாக நடைபெற்ற முனியாண்டி கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழங்கப்பட்ட பிரியாணி பிரசாதத்தை பெரிய பெரிய பாத்திரங்களில் வாங்கிச் சென்றனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ளது வடக்கம்பட்டி கிராமம், ஸ்ரீ முனியாண்டி சுவாமிக்கு தாய்க் கிராமமாக கருதப்படும் இக்கிராமத்தில் இருந்து  பிடிமண் எடுக்கப்பட்டு ஆங்காங்கே ஸ்ரீ முனியாண்டி சுவாமிக்கு  திருக்கோவில் அமைந்ததாக வரலாறு கூறப்படுகிறது. 

மேலும் தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில் நாம் பார்க்கும் உணவகத்தின் பொதுவான பெயர் முனியாண்டி விலாஸ். இந்த கோவிலை அடிப்படையாகக் கொண்டு தான் அனைத்து பகுதிகளிலும் முனியாண்டி விலாஸ் உணவகங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. முனியாண்டி விலாஸ் உணவகங்கள் அனைத்தும் தனி நபருக்கோ, ஒரு குழுவுக்கோ சொந்தமானது கிடையாது. இருப்பினும் இந்த கோவிலை மனதில் கொண்டே முனியாண்டி விலாஸ் உணவகங்கள் தொடங்கப்படுகின்றன.

Tap to resize

Latest Videos

undefined

Video: பழனி; குடமுழுக்கை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

இந்நிலையில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் திருக்கோயிலில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில் உணவகம் நடத்தும் தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக கடைக்கு விடுமுறை அளித்து, இக்கிராமத்தில் குடும்பத்துடன் ஒன்று கூடி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வீட்டில் இருந்து சுவாமிக்கு பூஜை பொருட்களான பழங்கள், மலர் உள்ளிட்டவற்றை தலைசுமையாக ஊர்வலமாக எடுத்து புறப்பட்டு, திருக்கோயிலை அடைந்து பூஜை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 2 ஆயிரத்து 500 கிலோ அரிசி மற்றும் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு கிராமத்திலேயே பிரியாணி சமைக்கப்பட்டது. கோவிலில் கூடும் பக்தர்கள், அண்டை கிராமங்களான கள்ளிக்குடி,  சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. 

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய புதுமண தம்பதி

முன்னதாக பிரியாணி பிரசாதம் வாங்குவதற்காக, கிராம மக்கள் பாத்திரங்களை கையில் ஏந்தி கொண்டு திருக்கோயில் முன்பு வரிசையாக காத்திருந்து பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். இவ்விழா காரணமாக, இரண்டு நாட்களாக வடக்கம்பட்டி கிராமம் கமகம பிரியாணி வாசனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

 

click me!