மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் பூஜைகள் சிறப்பாக நடைபெற உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். சிவனின் அருளை பெற மக்கள் விடிய விடிய கண் விழித்து விரதம் இருப்பர். இந்தாண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டாலும், தமிழகத்தின் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் விசேஷ பூஜை நடைபெறும்.
உள்ளூர் விடுமுறை
undefined
கன்னியாகுமரியில் நடைபெறும் அந்த விசேஷன பூஜையின் நிமித்தமாக, அம்மாவட்ட மக்கள் உள்ளூர் விடுமுறையை எதிர்நோக்கி இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பின் பலனாக மாவட்ட நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு மட்டும் நாளை (பிப்18, சனிக்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி பூஜை
கன்னியாகுமரியில் உள்ள 12 சிவாலயங்களில் விசேஷ பூஜை நடைபெறும். அதில் பாரம்பரியமாக செய்யப்படும் சிவாலய ஓட்டம் பிரசித்தி பெற்றது. இதில் பக்தர்கள் இரவு முழுக்க ஒவ்வொரு சிவாலயமாக ஓடியோடி வழிபடுவார்கள். இந்த ஓட்டத்தில் பல சிறப்புகள் உள்ளன. இந்த ஓட்டம் கன்னியாகுமரியில் மட்டும்தான் உள்ளது. இதன் காரணமாகவே அங்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருநந்திக்கரை, கல்குளம், திருமலை, பொன்மனை, பன்றிப்பாகம், திருவிடைக்கோடு, திருப்பன்றிக்கோடு, மேலாங்கோடு, திருநட்டாலம் போன்ற பன்னிரு சிவன் கோயில்களில் தான் இந்த சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினமான இன்று இரவில் இருந்து ஓடியோடி இந்த தரிசனத்தை பக்தர்கள் செய்யத் தொடங்கிவிடுவர். வாய்ப்பிருப்பவர்கள் அங்கு சென்று சிவனை காணுங்கள்.
விரத விவரம்
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்பவர்கள் மகா சிவராத்திரிக்கு முன் உள்ள தேய்பிறை ஏகாதசிக்கும் ஒரு வாரத்திற்கு முன்னால் விரதத்தை தொடங்க வேண்டும் என்பது வழக்கம். விரத தினங்களில் மட்டும் காலை தொடங்கி மாலை வரை இளநீர், நுங்கு, இரவில் துளசி இலை, துளசி தீர்த்தம் தான் ஆகாரம். சிவாலய ஓட்டத்தில் சபரிமலைக்கு செல்பவர்களுக்கு இருப்பது போல குருசாமி இருந்து வழிகாட்டுவார். சிவபக்தர்கள் கோவிந்தா! கோபாலா! என்ற நாமத்தை சொன்னபடியே ஓடி விரதத்தை முடிப்பார்கள்.
இதையும் படிங்க: குமரியில் நடக்கும் சிவாலய ஓட்டம் மகாசிவராத்திரி அன்று ஓடி ஓடியே 12 சிவாலயங்களை தரிசிக்கும் வழிபாட்டின் பின்னணி
இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: எப்போது கண் விழிக்க வேண்டும்? விரத ஆரம்பம் முதல் நிறைவு வரை முழுவிவரம்..!