குலதெய்வம் கோயிலில் இருந்து கொண்டுவரும் இந்த ஒரு பொருளால் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் யாவும் காணாமல் போகும். இதை முழுமையாக தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள்.
குடும்பத்திற்கு வரும் நிறைய கஷ்டங்களுக்கு வாஸ்து தோஷம், கிரகநிலைகளின் பெயர்ச்சி விதி போன்ற பல காரணங்கள் இருக்கும். இந்த துன்பங்களிலிருந்து நம்மை காத்து அரவணைப்பது குலதெய்வம் என்பது எல்லோரும் அறிந்ததே. குலதெய்வத்தினுடைய அனுக்கிரகம் நம் மீது இருந்தால் இஷ்ட தெய்வத்தின் அருள் நமக்கு தானாக கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் குலதெய்வம் கோவிலுக்கு நேரடியாக சென்று வழிபாடு செய்வதால் குடும்பத்திற்கு நன்மைகள் கிடைக்கும். ஆனால் எல்லோராலும் மாதம்தோறும் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாது. அப்படி செல்ல முடியாத நபர்கள் 2 மாதங்களுக்கு ஒரு தடவையாவது அல்லது 3 மாதத்திற்கு ஒரு தடவையாவது என ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு முறை குலதெய்வம் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும்.
குலதெய்வ அதிசயம்
உங்களுக்கு எத்தனையோ கஷ்டங்கள் இருக்கலாம்; ஆனால் குலதெய்வம் கோயிலுக்கு செல்லாமல் மட்டும் இருக்கக்கூடாது. குலதெய்வ வழிபாடு கஷ்டமான காரியமும் கிடையாது. குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது அங்கிருந்து கொண்டு வரும் ஒரு பொருள்தான் நம் வீட்டை சண்டை சச்சரவுகள் இன்றி பணக்கஷ்டங்கள் வராமல் நிம்மதியாக வைத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை.
இதையும் படிங்க: மறந்தும் மற்றவர்களிடம் வாங்கக் கூடாத பொருள்கள்.. மீறினால் உங்களுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிடும்..
அந்தப் பொருள் குலதெய்வம் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு கைப்பிடி மண் தான். குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் குடும்பத் தலைவரும் தலைவியும் இணைந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த புனித மண்ணை மஞ்சள் நிற துணியில் போட்டு முடிந்து வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இந்த முடிச்சை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூளும் கலந்து வைக்கணும். ஒரு செம்பு தகட்டில் உங்களுடைய குலதெய்வம் பெயரை எழுதி, அந்த செம்புத்தகட்டையும் பூஜை அறையில் இருக்கும் மண்ணோடு மஞ்சள் துணியில் வைத்து கட்டி வையுங்கள்.
குலதெய்வ வழிபாடு
இந்த முடிச்சை வீட்டில் உள்ள பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். யார் கையும்படாத உயரமான இடத்தில் இந்த முடிச்சை வைத்து விட வேண்டும். நாள்தோறும் பூஜை செய்த பின் இந்த முடிச்சுக்கும் சேர்த்து ஊதுவத்தி, தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் புதிய மண்ணை கொண்டு வரலாம். வீட்டில் இருக்கும் பழைய மண்ணை வீட்டு தோட்டத்திலோ அல்லது மண்பாங்கான வேற இடத்திலோ கொட்டி விட வேண்டும். இப்படி குலதெய்வ கோயிலில் இருந்து நாம் கொண்டுவரும் மண்ணில் குலதெய்வம் குடியிருக்கும் என்பது ஐதீகம்.
உங்கள் வீட்டில் தீராத கஷ்டங்கள் ஏற்படும் போதும் மனக்குறைகள் இருக்கும் போதும் குலதெய்வ கோயிலுக்கு உங்களால் செல்ல முடியாவிட்டால் இந்த முடிச்சில் இருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் விபூதியாக பூசி குல தெய்வத்தின் பெயரை சொல்லுங்கள். உங்கள் கஷ்டங்கள் தீரும். இதை நம்பிக்கை இருப்பவர்கள் மனதார நம்பி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: இன்று சங்கடஹர சதுர்த்தி... இரவுக்குள் விநாயகரை மறக்காம கும்பிட்டுக்கோங்க.. சகல சங்கடங்களும் தீரும்..!