குரங்கை அனுமனின் வடிவமாக கண்டு சிலர் வழிபடுகின்றனர். குரங்கைக் கண்டால் சாப்பாடு கொடுக்கும் வழக்கம் வைத்திருக்கிறார்கள். அதனால் என்ன பலன் கிடைக்கும் என்று பாருங்கள்.
இந்து மதத்தில் விலங்குகளுக்கு என கடவுளின் தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சில விலங்குகள் மற்றும் பறவைகள் கடவுளின் வாகனங்களாக கருதப்படுகின்றன. இதற்காகவே அவற்றை வழிபடவும் செய்கிறார்கள். விநாயகரின் வாகனம் எலி, மகா லக்ஷ்மியின் வாகனம் ஆந்தை, விஷ்ணுவின் வாகனம் கருடன் முறையே ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு விலங்கை வாகனமாக கொண்டுள்ளதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படி இந்து மதத்தில் குரங்குக்கு முக்கிய இடம் உண்டு. குரங்கு அனுமனின் வடிவமாக வழிபடப்படுகிறது. குரங்கிற்கு உணவளிக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது.
பெரும்பாலான சுற்றுலா தலங்களில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கோயில்களில் கடவுளை தரிசனம் செய்த பிறகு, அங்கு காணப்படும் குரங்குக்கு பழங்கள், ரொட்டிகளை பக்தர்கள் வழங்குகிறார்கள். இதனால் அதிர்ஷம் உண்டாகும். ஏனெனில் குரங்குகள் அனுமனின் வடிவம் மட்டுமல்ல. இது புதன் கிரகத்தை குறிக்கிறது. நீங்கள் அனுமர் பக்தராக இருந்தால் அல்லது உங்கள் ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால், குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
அதிர்ஷ்டம்...
*காலையில் குரங்கைப் பார்ப்பது நல்ல அறிகுறி. அதிகாலையில் குரங்கைக் கண்டால், உங்கள் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
*குரங்குக்கு காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் உணவளிப்பது நல்ல பலனைத் தரும். குரங்குகளுக்கு உணவளிப்பது அந்த அனுமனுக்கே உணவு வழங்குவது போன்றது.
குரங்குகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்?
*குரங்குகள் சாப்பிட்டாலும் நாம் ஒருபோதும் இறைச்சி கொடுக்கக் கூடாது. சைவ உணவையே கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*குரங்குகள் இனிப்புகளை விரும்பி உண்ணும். இதனால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் பலமாகிறது.
*உங்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் பலவீனமாக இருந்தால் குரங்குக்கு சிவப்பு நிற பழம் கொடுக்க வேண்டும். ஆனால் ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால், குரங்குகளுக்கு நெய்யில் செய்த சப்பாத்தியை தவறாமல் கொடுக்க வேண்டும்.
*குரங்குகளுக்கு அன்னம் அளித்தால் சுக்கிரனை உற்சாகப்படுத்துகிறது. இதனால் பெண்கள் அதிக பயன் பெறுகின்றனர். இது உங்கள் அழகை இரட்டிப்பாக்குகிறது.
இதையும் படிங்க: சர்வதேச மகளிர் தினம் இன்று.. பெண்களுக்காக ஏன் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
*குரங்குக்கு பப்பாளி பழம் கொடுத்தால் உங்கள் ஜாதகத்தில் வியாழன் வலுவடையும். இதனால் திருமணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். பப்பாளி மட்டுமின்றி மஞ்சள் நிற உணவு பொருளை வழங்கினாலும் வியாழன் பலன் தரும்.
தினமும் தண்ணீர்..!
விலங்கு, பறவை, மனிதனுக்கு தண்ணீர் கொடுப்பது புண்ணிய செயல். குரங்குக்கு தினமும் தண்ணீர் கொடுத்தால் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வலுவடையும். தாயாருடன் உறவு வலுப்பெறும், தாயாரின் ஆரோக்கியம் மேம்படும்.
குரங்குக்கு கறி மிகவும் பிடிக்கும். உங்கள் ஜாதகத்தில் சனி உக்கிரமாக இருந்தால் குரங்குகளுக்கு கறியை உணவாக கொடுக்க வேண்டும். தினமும் காலை அல்லது சனிக்கிழமை காலை கறி பரிமாறலாம்.
இதையும் படிங்க: சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!