கும்பகோணம் மகாமக திருக்குளத்தில் இன்று நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
கும்பகோணம் பகுதிகளில் உள்ள 6 சிவாலயங்களிலும், 3 வைணவ ஆலயங்களிலும் கடந்த 25ம் தேதி மற்றும் 26ம் தேதி முறையே கொடியேற்றத்துடன் மாசி மக விழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவின் முக்கிய நிகழ்சியாக இன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர் உள்ளிட்ட 12 சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் சிறப்பு அலங்காரங்களுடன் ரிஷப வாகனங்களில் திருவீதியுலாவாக சென்று மகாமக திருக்குளக்கரையில் எழுந்தருளினர்.
பெண்களின் சபரிமலை; மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கொடியேற்றம்
இதைத் தொடர்ந்து சிவவாத்தியங்கள் முழங்க அஸ்திர தேவர் திருமேனிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். பின்னர், ஒரே இடத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
பெரம்பலூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; ஆட்டோ ஓட்டுநர் கைது
அறநிலைய துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையினரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாசி மாதம் பவுர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திர தினமே மாசிமகமாகும்.