Vastu Day: மாசி மகம் நாளான இன்று வாஸ்து புருஷனை வழிபட்டால் சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.
ஒரு மனையை வாங்கும்போதே கவனமாக வாங்கவேண்டும். அதனால் பணத்தையும் நிம்மதியும் இழக்கக் கூடாது என்பதற்காக தான் வாஸ்து தகவல்களை மனையடி சாஸ்திரத்தில் குறித்து கொடுத்திருக்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். வாஸ்து தான் மனையடி சாஸ்திரத்தின் மையமாக திகழ்கிறார். வாஸ்து என்றால் ஆண் தெய்வத்தின் திருநாமம். இவர் மனை, பூமி ஆகியவை சம்பந்தப்பட்ட தெய்வம். புருஷன் என்றால் ஆள்பவர் என்று பொருளாகும். மனையையும் பூமியையும் ஆள்பவர் என்பதால் வாஸ்து புருஷன் என்று சொல்கிறது மத்ஸயபுராணம்.
புராண கதை
undefined
ஐயன் சிவன் அந்தகாசுரனுடன் போரிட்டு வெற்றி கண்டார். அந்த நேரம் சிவனின் நெற்றியில் இருந்த வியர்வைத் துளியில் ஒன்று பூமியை தொட்டது. அந்த துளியில் ஒரு பயங்கர பூதம் வெளிவந்தது. அதற்கு அகோரப்பசி எடுத்தது. அகோரப் பசியினால் ஆட்கொள்ளப்பட்ட அந்த பூதம் போரில் இறந்து கிடந்தவர்களை சாப்பிட்டு பசியாற முயன்றது. ஆனாலும் பசி தீரவே இல்லை. இதனால் சிவனை நோக்கி அந்த பூதம் தவம் புரிய தொடங்கியது. அதனுடைய தவத்தில் மனம் குளிர்ந்த சிவன், பூதத்திடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
பூதமோ, இந்த பூமி மொத்தமும் தன் கண்காணிப்பில், தன் ஆளுமையின் கீழ் இருக்கவேண்டும் என கேட்டு கொண்டது. அழிக்கும் சக்தியை தனக்கு தர வேண்டும் என்றும் பூதம் சிவனை கேட்டுகொண்டது. இதை அறிந்த பிரம்மன் பூதத்தை குப்புற தள்ளினார். அவருடன் தேவர்களும் சேர்ந்து கொண்டனர். பிரம்மனும் தேவர்களும் பூதத்தின் மீது அமர்ந்து அதனை எழுந்திருக்க விடாமல் செய்தனர். அப்போது பூதம் "பசிக்கிறது பசிக்கிறது" என கூப்பாடு போட்டது. அதற்கு பிரம்மனோ,"பூலோகத்தில் அந்தணர்கள் வைவஸ்வத ஹோமத்தில் அளிக்கும் பொருட்களை நீ உண். பூமியில் வசிக்க கட்டிடம் கட்டுபவர்கள், உன்னை தொழுது ஹோமம் வளர்ப்பர். அதில் வைக்கின்ற பொரி போன்ற உணவுகளை உண்டு பசியாற்றிக்கொள்''என்றார். இதற்காக தான் வாஸ்து புருஷன் எனும் வாஸ்து பகவானுக்கு ஹோமத்தில் உணவு சமர்ப்பிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
வாஸ்து பகவான் அருள்
ஹோமத்தில் அந்த உணவை உண்ணும் வாஸ்து பகவான், எங்கு இடத்தில் ஹோமம் செய்யப்படுகிறதோ, யார் புதிய கட்டிடம் எழுப்புகிறார்களோ அவர்களையும், அந்த இடத்தையும் நன்றாக வாழச் செய்கிறார் என மனையடி சாஸ்திரம் கூறுகிறது.
இதையும் படிங்க: இன்று மாசி மகம்... இந்த நன்னாளில் இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்தால்.. முடிவில்லா நன்மைகள் கிடைக்கும்!
இதன் காரணமாக வாஸ்து பகவானுக்கு ஏற்ற நாளில், நேரத்தில், பூமியில் கிணறு தோண்டினாலும் மனையில் அஸ்திவாரம் தோண்டினாலும் நல்லது. அதன்படி தான் வாசற்கால் வைப்பது, கிரகப்பிரவேசம் செய்வதையும் மக்கள் பின்பறுகின்றனர்.
வாஸ்து பகவான் வழிபாடு
மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தையே ஆள்வார்கள் என்பது ஜோதிட வாக்கு. அந்த மகிமை கொண்ட மாசி மகமும் வாஸ்து நாளும் இணைந்து இந்தாண்டு வந்துள்ளது. இன்றைய தினம் வாஸ்து பகவானை வேண்டி கொண்டால் பாதி கட்டப்பட்டு கிடக்கும் வீடு கூட துரியமாக கட்டி முடிக்கும் யோகம் கிடைக்கும். தடையின்றி வீடு கட்டும் வேலைகள் நடக்க வாஸ்து பகவான் இன்று அருள் புரிவார். வாடகை வீட்டில் வாழுபவர்களும் இன்றைய வாஸ்து நாளில் பூஜை செய்யலாம்.
வாஸ்து நாள் வழிபாடு
வாஸ்து நாளில் வீட்டிற்கு திருஷ்டி சுற்றி போட்டால் தீமை விலகி நன்மை கிடைக்கும். தேங்காய், எலுமிச்சை அல்லது பூசணிக்காய் இதில் ஏதேனும் கொண்டு வீட்டை திருஷ்டி கழித்துவிடுங்கள். இதை செய்யமுடியவில்லையா? ஒரு கற்பூரத்தால் வீட்டை திருஷ்டி கழித்து வாசலில் கொளுத்தி விடுங்கள். துஷ்ட சக்திகள் வீட்டை விட்டு அகலும்.
இதையும் படிங்க: மறந்தும் உப்பை மட்டும் கடனாக கொடுக்க கூடாதாம்.. மீறினால் வீட்டில் தரித்தரம் தாண்டவம் ஆடும் தெரியுமா?