Nava Kailayam Temples: பாவங்கள் விலக்கி முக்தி அளிக்கும் நவ கைலாய தலங்களை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
திருநெல்வேலி என்றால் நெல்லையப்பரும், காந்திமதி தாயார் தான் எல்லோர் நினைவுக்கும் வருவார்கள். இங்கிருக்கும் சிவாலயங்கள் நம்முடைய பாவங்களை நீங்க செய்து சிவ பதத்தையும் கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை.
கடவுளை அடைவதையே மனித வாழ்வில் நோக்கமாக ஆன்மீக சான்றோர்கள் சொல்வார்கள். சிவனை வழிபடுபவராக இருந்தால் கைலாய பதவியும், பெருமாளை வழிபடுபவர்கள் வைகுண்ட பதவியும் அடைவதே வாழ்நாள் நோக்கமாக கொண்டிருப்பார்கள். கையிலை நாதன் சிவனை நேரில் தரிசனம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள 9 சிவாலயங்கள் நமக்கு உதவுகின்றன.
இந்த கோயில்களில் வழிபட்டால் சிவலோக பதவி கிடைக்கும் என நம்பப்பட்டு வருகிறது. இந்த கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயில்களை நவ கைலாயம் என்கிறார்கள். இவை திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இங்கு சென்று சிவனை தரிசனம் செய்தால் பாவங்கள் விலகி முக்தி பெறுவோம் என்பது ஐதீகம்.
நவ கைலாய கோயில் அமைவிடங்கள்..
•சூரியன் -பாபநாசநாதர் கோயில் (பாபநாசம்)
• சந்திரன் - சேரன்மாதேவியில் உள்ள கைலாசநாதர் கோவில்
• செவ்வாய் - கோடகநல்லூரில் இருக்கும் கைலாசநாதர் கோயில்
• ராகு - குன்னத்தூரில் இருக்கும் கோத பரமேஸ்வரர் கோயில்
• குரு - முறப்பநாட்டில் இருக்கும் கைலாசநாதர் கோவில்
• சனி - ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் கைலாசநாதர் கோயில்
• புதன் - தென்திருப்பேரையில் இருக்கும் கைலாசநாதர் கோயில்
• கேது - ராஜபதியில் இருக்கும் கைலாசநாதர் கோயில்
• சுக்கிரன் - சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில்
இதையும் படிங்க: பிச்சை எடுத்து செய்யும் சிவன் கோயில் பரிகாரம்.. ஆண் வாரிசுகளின் தலைமுறை சாபம்.. நீக்கும் சிவனருள்..
இதில் உள்ள முதல் மூன்று தலங்களும் மேல் கைலாயம் என அழைக்கப்படுகிறது. அடுத்து வரும் மூன்று தலங்கள் நடுகைலாயம் எனவும், கடைசியில் உள்ள மூன்று தலங்கள் கீழ் கைலாயம் என்றும் கூறப்படுகிறது. இதில் குன்னத்தூர் தவிரவும் பிற தலங்களிலும் சிவன், கைலாசநாதர் எனும் திருநாமத்துடன் வீற்றிருந்து அருள் புரிந்து வருகிறார். இங்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்தால் நிச்சயம் வாழ்வில் ஒருமுறையாவது அங்கு சென்று வழிபடாமல் இருக்கமாட்டீர்கள். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
தோஷங்களை தீர்க்கும் வல்லமை நவகைலாய ஆலயங்களுக்கு உள்ளது. சிலருக்கு ஜாதகத்தில் நாகதோஷம் இருக்கும். ஒரே நாளில் ஒன்பது கோயில்களையும் தரிசித்தால் அவர்களுக்கு பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: Explained: உடற்பயிற்சி செய்யும்போதே நிகழும் மரணங்கள்.. மருத்துவர்கள் சொல்லும் பின்னணி என்ன?