குபேரனுக்கு பிடித்த இந்த செடியை வீட்டில் வைத்தால் போதும்.. வீட்டில் செல்வ செழிப்பு பெருகும்..

By Ramya s  |  First Published Jul 11, 2023, 11:38 AM IST

குபேரனுக்கு மிகவும் பிடித்தமான இந்த செடியை வீட்டின் இந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.


நம் வீட்டின் நிதி நிலையை மேம்படுத்தவும், செல்வ செழிப்பை அதிகரிக்கவும் பணச்செடி (Money Plant) போன்ற பல வகையான செடிகளை நம் வீடுகளில் வைக்கிறோம். எனினும் வாஸ்துவை கருத்தில் கொள்ளாமல் பல செடிகளை வைக்கிறோம். எனவே ஒவ்வொரு தாவரமும் உங்கள் வீட்டையும் கட்டிடக்கலையையும் பாதிக்கிறது. ஆனால் ஒரு பணச்செடியை விட அதிக நன்மையை வழங்குகிறது. இந்த தாவரத்தின் பெயர் கிராசுலா (Crassula). ஆம், கிராசுலா செடி குபேரருக்கு மிகவும் பிடித்த செடியாக கருதப்படுகிறது. இதன் சிறப்பு அம்சங்களில் ஒன்று, இதை நிறுவுவதற்கு உங்களுக்கு சிறப்பு இடம் தேவையில்லை. ஆனால், இந்தச் செடியை எங்கு நடுவது, ஏன் நடவு செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

கிராசுலா

Tap to resize

Latest Videos

குபேர பகவான் இந்த செடியை மிகவும் விரும்புவதாகவும், எனவே இந்த செடிகளை நடுவதால் வீட்டில் குபேரனின் அருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இது தவிர ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று செல்வம் பெற உதவுகிறார். ஆனால் இதற்கு நீங்கள் அதை சரியான திசையில் வைப்பது முக்கியம். இந்த செடியை வைக்கும் போது அதை இருட்டில் வைக்கக்கூடாது, அதன் இலைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Vastu Tips: வீட்டின் இந்த 5 இடங்களில் மரம் நடுங்கள்; நல்ல பலன் கிடைக்கும்..!!

வேலை உயர்வுக்கு 

நீங்கள் வேலையில் பதவி உயர்வு பெற விரும்பினால், இந்த செடியை வீட்டின் தென்மேற்கு திசையில் வைக்கவும். அலுவலகத்தில் உங்கள் மேஜையில் இந்த செடியை வைக்கலாம். இது உங்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும்.நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்கள் என்றால், இந்த செடியை கேஷ் கவுண்டருக்கு மேலே வைக்க வேண்டும். இதன் மூலம் குபேரனின் ஆசியை பெற முடியும். மேலும் தொழில் வளரவும், லாபத்தை நோக்கிச் செல்லவும் உதவும்.

வீட்டின் செல்வ செழிப்புக்கு

உங்கள் வீட்டில் செழிப்பு இருக்க வேண்டுமானால், இந்த செடியை உங்கள் வீட்டு பால்கனியிலும் மொட்டை மாடியிலும் வைக்கலாம். உண்மையில், இந்த செடி எவ்வளவு செழிப்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்கள் வீடு மிகவும் செழிப்பாக இருக்கும். வீட்டின் மூடிய பகுதிகள், கதவுகள் மற்றும் படுக்கையறைகளில் இந்த செடியை வைக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் எதிர்மறை ஆற்றலை உருவாக்கலாம்.

Vastu Tips: பணத்தட்டுப்பாடு இருக்கா? துளசி கொண்டு இந்த பரிகாரம் செய்யுங்க  பணம் தீராது..!!

click me!