தாய் சந்திரன் தகப்பன் சூரியன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் கோயில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம் நடைபெறும். இந்நிலையில், ஆடியில் என்னென்ன செய்யலாம் மற்றும் செய்யக் கூடாது என்பதற்கான காரணங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: இந்த ஆடி மாதம் ஒரே நாளில் பிரசித்து பெற்ற அம்மன் கோயில்களுக்கு செல்லலாம்.. எப்படி தெரியுமா?
ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை:
- ஆடி மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது. அதற்கு பதிலாக ஆவணியில் நடத்தலாம்.
- ஆடி மாதத்தில் திருமணம் ஆன பெண் தாலி பிரித்து கோர்க்கலாம்.
- ஆடி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஆவணியில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.
- ஆடி மாதம் பெண் தெய்வமான அம்பிகைக்குரிது. ஆகையால் ஆடி வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தைக்கு பதிலாக பெண் குழந்தை பிறந்தால் மிகவும் சிறப்பானது. ஒருவேளை ஆண் குழந்தை பிறந்தாலும் தவறல்ல.
- ஆடி மாதம் மட்டுமல்ல மற்ற எந்த மாதத்தின் தொடக்கத்திலும் மொட்டை அடிக்க கூடாது.
- மேலும் ஆடி மாதத்தில், நீங்கள் வெளியூரில் இருந்தால் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவை ஒரே நாளில் வைக்கலாம். ஒருவேளை நீங்கள் உள்ளூரில் இருந்தால் வைக்கக் கூடாது.
- ஆடியில் புதுமணத் தம்பதிக்கு விருந்து வைத்து புதுபெண்ணை அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.
- இந்த ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் எதுவும் நடக்காது.
- ஆடி மாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் காலமெல்லாம் இணைப் பிரியாமல் வாழ வேண்டும் என்பதற்காக தான்.
- ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம் வைப்பதை தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக ஆவணி மாதத்தில் வைக்கலாம்.
- ஆடி மாதம் பெண் பார்க்கச் செல்வதை தவிர்ப்பது நல்லது.