Aadi Amavasya 2023: ஆடி மாதத்தில் 2 அமாவாசை: இந்த அமாவாசையை கடைபிடிக்க வேண்டும்? 

By Kalai Selvi  |  First Published Jul 10, 2023, 12:53 PM IST

ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. இதில் எந்த அமாவாசையை ஆடி மாதம் அமாவாசையாக கடைபிடிப்பது என்ற சந்தேகம் அநேகர் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, இந்த ஆடியில் எந்த அமாவாசையை கடைபிடிக்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.


ஆடி மாதம் இந்துக்களுக்கு மிகவும் சிறந்த நாளாகும். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி முடிவடைகிறது. இந்துக்கள் இந்நாளின் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் பலர் விரதம் இருந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர். அதுபோல் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாகும். மேலும் ஆடி மாதம் துவங்கி அடுத்த 6 மாதங்கள் தேவர்களின் இரவு பொழுதாகும். எனவே, இம்மாதத்தில் சுபகாரியங்கள் நடக்காது. அதுபோலவே, ஆடி அமாவாசை பித்ரு கடன் நிறைவேற்ற சிறந்தநாளாகும். இவ்வாறு நீங்கள் பித்ருக்களை வழிப்பட்டு அவர்களுக்கு தர்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

ஆடி அமாவாசையின் போது கடக ராசியில் தாயாக கருதப்படும் சந்திரன் தந்தையான சூரியனுடன் இணையும். இவை இரண்டும் இணையும் நாளே அமாவாசை என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. மேலும் இவை இரண்டும் ஒரே நாளில் ஒன்றாக இணைவதால் ஆடி அமாவாசையில் நம் முன்னோர்களுக்குச்  செய்யப்படும் பித்ரு கடன் அவர்களிடம் நேரடியாகச் சென்றடையும் என்பது நம்பிக்கை. மேலும் இந்நாளில் நம்முடைய வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் விளக்கேற்றி முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து அவர்களை வழிப்பட்டால் அவர்கள் மனம் மகிழ்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஆடி வெள்ளிகிழமை இந்த பூஜை செய்தால்.. வேண்டியது நடக்கும்.. தோஷங்கள் நீங்கும்.. சகல நன்மைகளும் கிடைக்கும்

இந்நிலையில், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் எந்த நாளை ஆடி அமாவாசையாக எடுத்து, விரதமிருந்து முன்னோர்களுக்கு வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் இந்த 2 அமாவாசைகளையும் கடை பிடிப்பது நல்லது தான் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஆடி தொடங்கி அது முடியும் வரை உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்திற்கு வருகின்றனர். ஆகையால் இந்த 2 அமாவாசையையும் கடைபிடிப்பது மிகவும் நல்லது.

click me!