தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள் ஆடி, அம்மன் கோயில் சுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ல சுற்றுலா தலங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைத்து சுற்றுலா தொழில்களை மேம்படுத்த சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள் ஆடி, அம்மன் கோயில் சுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் நடப்பாண்டு சென்னை, மதுரை, திருச்சி தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்து பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆன்மீக பயணிகள் தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆடி அம்மன் கோயில்கள் சுற்றுலா திட்டம் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த ஒரு நாள் அம்மன் சுற்றுலா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள கோயில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாக அதிகாரிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பயணிகளை வரவேற்று, கோயில்களுக்கு அழைத்து செல்வார்கள். அவர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள் www.ttdconline.com என்ற இணையதளம் மூலமாகவும், மதுரை அழகர் கோயில் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 63806 99288, 91769 95841 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Aadi Amavasya 2023: ஆடி மாதத்தில் 2 அமாவாசை: இந்த அமாவாசையை கடைபிடிக்க வேண்டும்?