கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில்களின் லிஸ்ட் இதோ!

By Kalai Selvi  |  First Published Aug 23, 2024, 10:39 AM IST

Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோயில்களின் பட்டியல்கள் இங்கே..


மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணர் இந்து கடவுள்களில் ஒருவராவார். விஷ்ணு 8வது அவதாரமாக அவதரித்த நாளை தான் நாம் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். ஸ்ரீ கிருஷ்ண பகவானின் குறித்த பல புராண கதைகள் மகாபாரதம் பகவத் கீதையில் உள்ளது. குறிப்பாக, தமிழர்களால் செல்லமாக கண்ணன் என்று அழைக்கப்படுகிறார் கிருஷ்ணர்.

கிருஷ்ண ஜெயந்தி வரும் 26 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனைத்து கிருஷ்ண கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்படும். எனவே, கிருஷ்ண ஜெயந்தி நாளில் தமிழகத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணரின் கோயில்களின் பட்டியல்கள் இங்கே..

Latest Videos

undefined

இதையும் படிங்க:  வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைவதற்கு பின்னணியில் இப்படி ஒரு காரணமா? இது தெரியாமல் பூஜை பண்ணாதீங்க! 

தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள் :

1. பார்த்தசாரதி கோயில் (சென்னை) :

சென்னை மயிலாப்பூர் என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சென்னையில் புகழ்பெற்ற வைணவ கோயில்களில் மிக முக்கிய ஒன்றாகும். இந்த பார்த்தசாரதி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்நாளில் ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணரை காண வருவார்கள்.

2. கோகுலகிருஷ்ண கோயில் (திருச்சி) :

திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும் புல்லாங்குழலுடன் கிருஷ்ணர் கோவிலின் கருவறையில் இருந்து காட்சி தருகிறார். 

3. ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் (தஞ்சாவூர்) : 

தஞ்சாவூர் மாவட்டம் மன்னர் குடியில் இந்த கோவில் அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற கிருஷ்ண கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோவிலில் இருக்கும் திருமால் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இதையும் படிங்க:  கிருஷ்ண ஜெயந்தி 2024 : விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்!

4. ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் (திருவள்ளூர்) :

திருவள்ளுவர் மாவட்டம் வேப்பங்கொண்டபாளையம் என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.  குழந்தை வரம் தருவதற்கு மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.

5. கிருஷ்ணர் கோவில் (ஈரோடு) :

ஈரோடு மாவட்டம் மயிலாடுதுறை எந்த இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கிருஷ்ணரின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக இந்த கோவிலில் கொண்டாடப்படுவது வழக்கம்.

6. நவநீதி கிருஷ்ண கோவில் (மதுரை) : 

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பழமையான கிருஷ்ணரின் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் கிருஷ்ணர் சத்தியபாமா மற்றும் ருக்மணியுடன் காட்சி தருகிறார். சொல்லப்போனால், இந்த கோவிலானது குருவாயூர் கோயிலுக்கு நிகரான புகழ்பெற்றது.

7. கிருஷ்ணன் கோவில் (நாகர்கோவில்) : 

நாகர்கோவில் வடசேரி என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆனது ஆதி வர்மனால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் கிருஷ்ணர் குழந்தை வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!