காரடையான் நோன்பு 2024 : கணவரின் ஆயுள் அதிகரிக்க பெண்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும்?

By Ramya sFirst Published Mar 13, 2024, 2:55 PM IST
Highlights

காரடையான் நோன்பு எப்போது, இந்த நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

காரடையான் நோன்பு என்பது திருமணமான பெண்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாகும். இது சாவித்ரி நோன்பு, கௌரி விரதம், காமாட்சி விரதம், மாங்கல்ய நோன்பு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் திருமணமான பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். காரடையான் நோன்பு எப்போது, இந்த நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் தொடங்கும் நேரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு என்றாலே சத்தியவான் - சாவித்ரி கதை தான் நினைவுக்கு வரும்...  தனது கணவன் சத்தியவான், எமனின் பாசக்கயிற்றில் சிக்கி இருப்பதை தெரிந்து கொண்ட சாவித்ரி, அம்பிகையை நோக்கி கடும் விரதம் மேற்கொண்டார்.

இந்த விரதத்தின் பலனால் எமலோகத்தின் வாசல் வரை சென்று எமனுடன் போராடி பல வரங்களை பெற்றார். அப்படி சாவித்ரி பெற்ற ஒரு வரத்தின் பலனாக தனது கணவரின் உயிரை எமனிடம் இருந்து மீட்டு, தீர்க்க சுமங்கலியாக வாழும் ஆசியையும் பெற்றாள். இந்த காரடையான் நோன்பு நாளில் அம்பிகையை நினைத்து விரதம் இருந்தால், கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்றும் தாலி பாக்கியம் பலப்படும் என்பது நம்பிக்கை. 

உங்க வீட்டில் குலதெய்வம் இருக்கா.. இல்லையா..?? கண்டுபிடிக்க ஈசியான அறிகுறிகள்!

இந்த ஆண்டு காரடையான் நோன்பு மார்ச் 4-ம் தேதி வருகிறது. இந்த நாளில் காலை 6.40 முதல் பகல் 12.48 வரை நோன்பு கடைபிடிக்க வேண்டும். திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், திருமண வயதில் இருக்கும் பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்று இந்த விரத்தை மேற்கொள்ளலாம். 

எப்படி விரதம் இருக்க வேண்டும்?

விரதம் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் ஏதேனும் ஒரு அம்மன் படம் முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர் ஒரு இலையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி தாம்பூல பொருட்களை வைக்க வேண்டும். பின்னர் மாற்றிக்க் கொள்ல வேண்டிய மஞ்சள் சரடில் பூ சுற்றி அந்த இலையில் வைக்க வேண்டும். ஒரு நூலில் மஞ்சள் தடவி நோன்பு தயார் செய்து அதிலும் பூ சுற்றி வைக்க வேண்டும். 

பங்குனி 2024 : பங்குனி மாத சிறப்புகள், முக்கிய விரத நாட்கள், விசேஷங்கள்.. முழு விவரம் இதோ..

அரிசி மாவு, காராமணி சேர்த்து செயும் கார அடை மற்றும் வெள்ளை அடை செய்து நைவேத்யமாக படைக்க வேண்டும். உருகாத வெண்ணெய் சிறிதையும் அந்த இலையில் வைத்து அம்பிகைக்குரிய ஸ்லோகங்களை சொல்லி வழிபட வேண்டும். பின்னர் பூஜை முடிந்த பின்னர் மஞ்சள் சரடை மாற்றிக்கொள்ளலாம். மஞ்சள் சரடை மாற்றும் வழக்கம் இல்லை எனில், நோன்பு கயிரை கையிலோ அல்லது கழுத்திலோ கட்டிக்கொள்ளலாம்.காரடையான் நோன்பு கடைபிடிக்கும் வழக்கம் இல்லை எனில் வீட்டில் விளக்கேற்றி வைத்து அம்மனை வழிபட்டு, அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். 

click me!