தீராத நோய்கள் குணமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு ஜோதிட தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களை நாம் பின்பற்றினால் போதும் நம் வாழ்வில் எந்த பிரச்சனையும். ஜோதிடத்தில் நம்ப்பிக்கை இல்லாதவர்கள், எல்லாம் விதிப்படி தான் நடக்கும், ஜோதிடம் பார்ப்பதால் எதுவும் மாறாது என்று கூறலாம். ஆனால், நல்ல நேரம் வந்தால் தான் இதுபோன்ற நல்ல விஷயங்கள் நம் கண்ணில் படும். அதில் சில விஷயங்களை செய்யும் போது நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் தீராத நோய்கள் குணமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு ஜோதிட தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
எனவே உங்கள் வீட்டில் யாராவது அடிக்கடி நோய்வாய்ப்பட்டாலோ? தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை இருந்தாலோ? இந்த ஆன்மீக சடங்குகள் மற்றும் ஜோதிட அறிகுறிகளைப் பின்பற்றினால் போதும். அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.
காலண்டரில் திருவாதிரை நட்சத்திரம் எப்போது வருகிறது என்று பாருங்கள். அன்றைய தினம் மருத்துவனைக்கு செக்-அப்-க்கு போக வேண்டும் என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில், காலையில் எழுந்து சுத்தமாக நீராடி சுத்தமான பசுஞ்சாண விபூதிய கொண்டு, சிவன் கோவிலில் உள்ள குருக்களுக்கு தானம் செய்யுங்கள்.
பின்னர் உங்கள் பெயரைச் சொல்லி சிவன் கோவிலில் அர்ச்சனை செய்யுங்கள். முடிந்தால் தேங்காய் பூ வாங்கி வழிபடுங்கள். உங்கள் உடல் ஆரோக்கிய பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று சிவனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை முடித்து வீட்டிற்கு வந்தாலும் தவறில்லை, முடிந்தால் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். திருவாதிரை தினத்தன்று உங்கள் மெடிக்கல் செக்கப்-ஐ மேற்கொள்ளுங்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று புதிதாக மருந்து மாத்திரை சாப்பிட தொடங்க வேண்டும். உங்கள் நோய் எதுவாக இருந்தாலும் அது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும், மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்வது தவிர்க்கப்படும். நீங்கள் ஆரோக்கியமாக மாற வாய்ப்புள்ளது. இந்த பரிகாரம் ஒரு கட்டத்தில் மருத்துவமனைக்கு கூட செல்ல வேண்டியதில்லை என்ற நிலையை கொண்டு வரும் சக்தி கொண்டது. சிவபெருமான் மீது பாரத்தை போட்டு இந்த பரிகாரத்தை செய்தால் தீராத நோய்கள் கூட குணமாகும் என்றூ நம்பப்படுகிறது.
ஒரே ஒரு பொருள் போதும்.. நகை பெட்டியில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்..