ஒரே ஒரு பொருள் போதும்.. நகை பெட்டியில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்..

By Ramya s  |  First Published Aug 11, 2023, 1:17 PM IST

நகைப் பெட்டியில் இந்த ஒரு பொருளை வைத்தால் நகை சேர்ந்து கொண்டே இருக்குமாம்.


நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சமாவது சேமிக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விரும்பம்.  ம் என்று நினைக்கிறோம். அந்த பணத்தை நகைகளில் முதலீடு செய்வோம், இதனால் நாம் சேமிக்கும் பணம் என்றென்றும் நம்மிடம் இருக்கும். மேலும் அந்த நகையை எப்போதும் நம்முடன் வைத்திருக்க விரும்புகிறோம். எந்தச் சூழலிலும் நம் நகைகள் நம்மை விட்டுப் போகாமல் இருக்கவும், நகை சேரவும் ஒரு பரிகாரம் உள்ளது. ஆம். அதற்கு நகைப் பெட்டியில் இந்த ஒரு பொருளை வைத்தால் நகை சேர்ந்து கொண்டே இருக்குமாம்.

தங்கத்திற்கு அதிபதியாக கருதப்படும், சுவர்ணலக்ஷ்மி தாயார், திருமாலின் மார்பில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே திருமாலை வழிபடுவதால், நமக்கு ஏற்பட்டுள்ள சுவர்ண தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நம் வீட்டில் நகைகள் சேரும் என்பது ஐதீகம். புதன்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலுக்கு போகும் துளசி மாலை வாங்கி செல்ல வேண்டும். சுவாமிக்கு துளசி மாலை அணிவிக்கும்போது அந்த மாலை சுவாமியின் மார்பில் படும் படி இருக்க வேண்டும். பின்னர் பெருமாளை வணங்கிவிட்டு, நான் கொண்டு சென்ற துளசி மாலையை வாங்கி, திருப்பி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Tap to resize

Latest Videos

பின்னர் நம் வீட்டில் நகையை வைத்திருக்கும் இடத்தில் துளசியை அணிவிக்க வேண்டும். இப்படி வைத்துக் கொள்வதால் ம் ஆபரண தோஷம் அனைத்தும் நீங்கி மகாலட்சுமி கடாக்ஷம் உண்டாகி மேலும் மேலும் நகைகள் வந்து சேரும்.

கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பெருமாளுக்குத் தங்கள் கைகளால் துளசி மாலையைக் கட்டி, நாள் முழுவதும் பெருமாள் மீது துளசி மாலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மறுநாள் வியாழன் காலை, பூஜை முடிந்ததும், துளசி மாலையுடன் சிறிது பச்சைக் கற்பூரம் சேர்த்து, நகை உள்ள இடங்களில் வைக்க வேண்டும். மேலும் நகைகளில் உள்ள தோஷங்கள் நீங்கி நகைகள் பெருகும் என்பது ஐதீகம். இந்த பரிகாரம் நகைகளுக்கு மட்டுமல்ல, நீங்கள் பணத்தை வைக்கும் இடத்தில் துளசியை வைத்தாலும், பணம் மேலும் மேலும் பெருகும் என்று கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்.. தொழிலில் பல மடங்கு லாபம் கிடைக்குமாம்..

click me!