தொழில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பரிகாரம் உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
படித்தவர்களோ அல்லது படிக்காதவர்கள் யாரையும் நம்பி இருக்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கும் பலரும் சொந்தமாக தொழில் தொடங்குகின்றனர். அப்படி சொந்த தொழில் செய்யும் நபர்கள் தங்கள் தொழிலில் லாபத்தை அதிகரிக்க விரும்புகின்றனர். எனவே தொழில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பரிகாரம் உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
வியாபாரத்திலோ அல்லது வீட்டிலோ ஏதேனும் பணத்தடைகள் இருந்தால், தொழிலில் லாபம் ஈட்ட முடியாது. அதை தாண்டி பணம் சம்பாதித்தாலும் அந்த பணம் நிலைக்காது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். எனவே இந்த பரிகாரத்தை செய்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் நம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் மகாலக்ஷ்மியின் அனுகிரகத்தை முழுமையாக பெற்றதாக கருதப்படுகிறது. எனவே இந்த பொருட்களை வைத்து மகாலக்ஷ்மிக்கு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு பன்னீர் மற்றும் உதிரியான மல்லிகைப்பூக்கள், தாழம்பூ குங்குமம், சந்தனம் ஆகிய பொருட்களும் தேவை.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலை தீபம் ஏற்றி பூஜை செய்யும் போது இந்த பூஜையையும் செய்யலாம். பூஜையறையில் சாமி படங்களின் முன் தாம்பலம் வைக்க வேண்டும். அந்த தாம்பலத்தின் பன்னீர் ஊற்றி, அதில் மீதியுள்ள மல்லிகைப் பூக்களை போட்டு. நடுவில் தங்கமும் வெள்ளியும் வைக்க வேண்டும். அது நாணயங்கள் அல்லது நகைகள் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அது பயன்படுத்திய பொருளாக இருந்தால் பன்னீர் சுத்தம் செய்து அதில் போட வேண்டும்.
மற்றொரு தாம்பலத்தில் தாழம்பூ குங்குமம் மற்றும் சந்தனத்தை கலந்து, அதை தங்க வெள்ளி உலோகத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனை செய்யும் போது "ஸ்ரீம் ஓம் லம் லாபம் ஸ்வாஹா" என்று 108 முறை கூற வேண்டும். அன்றைய தினம் முழுவதும் தங்கமும் வெள்ளியும் அந்தத் தாம்பலத்திலேயே இருக்க வேண்டும். மறுநாள் அந்த தங்கம் மற்றும் வெள்ளியை எடுத்து உபயோகிக்கலாம். நாணயமாக இருந்தால், பூஜையை அறையிலோ, பீரோவிலோ வைக்கலாம். பன்னீர், மல்லிகைப் பூக்கள், அர்ச்சனை செய்த குங்குமம் சந்தனம் ஆகியவற்றை கால் படாத இடங்களில் போட்டுவிட வேண்டும்.
முடிந்த வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பூஜையை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதனால் நம் வீட்டில் தடையின்றி பணம் நிலையாக இருக்கும். தொழிலும் லாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
தாலி கயிற்றை எந்தெந்த கிழமைகளில் மாற்ற வேண்டும்? சிறந்த நேரம் எது?