இப்பிறவி கடன் மட்டும் அல்ல முற்பிறவி கடனையும் தீர்க்கும் திருச்சேறை செந்நெறியப்பர்!

By Dinesh TG  |  First Published Oct 8, 2022, 1:25 PM IST

கடன் வாங்காமல் வாழ்க்கை வாழ்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..  என்று சிலர் புலம்புவதை பார்த்திருப்போம். கடன் இல்லாத வாழ்க்கை உண்மையில்  வரம் தான் ஆனால் இதை எப்படி தவிர்க்க முடியும்.  ஆனால் நீங்கள் அதிகம் கடன் வாங்குபவர்களாக இருந்தால் உங்கள் ஜாதகத்தில் அதை கண்டறிந்துவிடமுடியும். 
 


கடன் வாங்காமல் வாழ்க்கை வாழ்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..  என்று சிலர் புலம்புவதை பார்த்திருப்போம். கடன் இல்லாத வாழ்க்கை உண்மையில்  வரம் தான் ஆனால் இதை எப்படி தவிர்க்க முடியும்.  ஆனால் நீங்கள் அதிகம் கடன் வாங்குபவர்களாக இருந்தால் உங்கள் ஜாதகத்தில் அதை கண்டறிந்துவிடமுடியும். 

உங்கள் ஜாதகத்தில் கடனை குறிக்கும் இடம் லக்னத்திலிருந்து 6 ஆம் இடம் ஆகும். இந்த இடத்தின் அதிபதி நட்பு, உச்சம், ஆட்சியிலிருந்தால்  ஆயுள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் கடன் பிரச்சனையால் மாட்டிகொள்வீர்கள். கடனுக்கு காரகத்துவம் பெற்றவர் சனி பகவான் என்றாலும். இந்த இடத்தில் சனி பகவானை தவிர வேறு கிரகங்களும் இருக்கலாம்.  அப்படியெனில் மீளவே முடியாதா என்று கேட்கலாம். கவலை கொள்ள வேண்டாம். இதற்கு பரிகாரங்கள் உண்டு.
 
நம்மை காக்கும்  தெய்வத்திடம் சரணடைந்தால்  கடன் தொல்லை  நிரந்தரமாக நம்மை விட்டு நீங்கவும் செய்யும்.  அதற்கு ஒரு வழி உண்டு. நீங்கள் கடன் தொல்லையிலிருந்து மட்டும் அல்ல முற்பிறவி கடனிலிருந்தும் மீள்வதற்கு  சிறந்த தலம் ஒன்று உண்டு. அந்த தலம் குறித்து தான் பார்க்க போகிறோம்.  தமிழகம் என்றாலே ஆலயம் நிறைந்த சிறப்பு மிக்க இடங்கள் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு வகையில்  ஒவ்வொரு ஆலயமும் சிறப்பு மிக்கது.  எல்லாமே ஒவ்வொரு வகையில் பரிகார தலங்கள் தான். அந்த வகையில் கடன் தொல்லையிலிருந்து விடுபட நாம்  செல்ல வேண்டிய தலம் குறித்து தெரிந்துகொள்வோம்.

Tap to resize

Latest Videos

வாழ்க்கையில் படும் இன்னல்கள் எல்லாவற்றுக்கும் அருமருந்தாகும் கோயில்களை கொண்டிருக்கும் இடத்தில் தான் நாம் வசித்துவருகிறோம். குழந்தைப்பேறு, திருமணம், மாங்கல்ய பாக்யம், வீடு பேறு, தோஷங்கள் நிவர்த்தி, பரிகாரம் என வாழ்க்கையின் முக்கிய காலகட்டங்களில் தெய்வங்களை தான் வணங்குகிறோம்.

 கடன் தொல்லைக்கு மட்டும் அல்ல  தீராத சிக்கல்கள், தீராத பிரச்சனைகள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை,  போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிகார தலங்கள் பலவும் உண்டு.  அதை கவனித்து அறிந்து அத்தலத்துக்கு சென்றால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்.  நீங்கள்  கடன் தொல்லையால்  அவதிப்படுபவர்களாக இருந்தால்   நீங்கள் வணங்க வேண்டியது  செந்நெறியப்பரை தான். 

பெருமாளை துயில் எழுப்பும் கெளசல்யா சுப்ரஜா .. எப்படி வந்தது தெரியுமா?

தஞ்சையில் திருச்சேறையில் அமைந்துள்ளது இந்த தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோரால் பாடப்பட்ட சிறந்த  திருத்தலம் இது.   முற்பிறவி கடனையும் தீர்க்கும் தேவாரத்தலம் என்று  இத்தலம் போற்றப்படுகிறது.  பக்தர்கள் தங்கள் முற்பிறவி கடனோடு  இப்பிறவி கடனும் தீர  இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். பிரதோஷ நாட்களில்  சிவனை தும்பை பூ மாலை சாற்றி வணங்கினால்  சகல தோஷங்களும் நீங்கும் ஏழு ஜென்மத்திலும்  இருக்ககூடிய தோஷங்களோடு பிரம்மஹத்தி தோஷமும் விலகும் என்பது ஐதிகம். 

பக்தனுக்கு படியளிக்கும் பெருமாள் கடன்காரன் ஆன கதை!)

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்க்க  மூலவர் ரிண விமோசனர் அருள்பாலிக்கிறார். இவரிடம் வந்து மனமுருகி உங்கள் பிரார்த்தனையை சொன்னால் வேண்டும் வரம் அளிப்பார். அதே நேரம் கடன் தொல்லை நீங்க இயன்றவரை இயலாதவருக்கு தானம் செய்யுங்கள்.  இதன் மூலம் முற்பிறவி கடனிலிருந்து நீங்கள் விடுபட முடியும்.

click me!