கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் புரியும் திருமலை திருப்பதி நாயகன் எம்பெருமான் திருமலைக்கு வந்த கதை தெரியுமா?
பூலோகத்தில் கொடுமைகள் தாண்டவமாடியபோது முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யாகம் நடத்த விரும்பினார்கள். யாகத்தின் பலன் ஒருவருக்கு தானே சேர வேண்டும். காப்பவனுக்கா, படைத்தவனுக்கா, அழிப்பவனுக்கா என்ற குழப்பம் அவர்களுக்கு இருந்தது.
ஆனால் இதை யாரும் தனிப்பட்ட முறையில் முடிவு செய்யக்கூடாது. இதற்கான பலனை ஒருவருக்கு கொடுக்க விரும்பினார்கள். அப்போது மூன்று பேரில் யாருக்கு கொடுப்பது என்பதை கண்டறியும் பொறுப்பு யாரிடம் என்னும் பேச்சு வந்தது. பாதத்தில் ஞானக்கண்ணும்,எதிர்காலத்தை கணிக்கும் சக்தியும் பிருகு முனிவரிடம் உண்டு என்பதால் அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பிருகு முனிவர் இலேசுப்பட்டவர் அல்ல, இந்த குணங்களை கொண்டிருக்கும் அவருக்கு இது குறித்து கர்வமும் உண்டு. இவரது கர்வத்தை அடக்க நமது பரம்பொருளும் சமயத்தை எதிர்பார்த்திருந்தார்.
பித்ரு தமது வேலையை தொடங்குவதாக சொல்லி கிளம்பினார். முதலில் படைக்கும் கடவுளான பிரம்மனிடம் சென்றார். பிரம்மனும் சரஸ்வதியும் சத்தியலோகத்தில் தனித்திருந்தார்கள். பிருகுக்கு தான் எல்லாம் தெரியும் என்னும் கர்வம் உண்டே அதனால் அனுமதியின்றி உள்ளே சென்றார். பிரம்மா கோபத்தால் பிருகு முனிவரை கண்டிக்க பக்தனை வரவேற்காத உனக்கு இனி பூலோகத்தில் பூஜையே கிடையாது என்று கர்வத்துடன் சொல்லி சிவனை தரிசிக்க கைலாயம் சென்றார்.
ஆனால் பாருங்கள் கயிலாயத்திலும் சிவனும் பார்வதியும் தனித்திருந்தனர். அங்கும் கர்வத்துடன் அனுமதி பெறாமல் உள்ளே சென்றார். அங்கும் தனது தவறை உணராமல் பக்தர்களை வரவேற்கும் அளவு பக்குவம் இல்லையே என்று நினைத்த பிருகு முனிவர் சிவனையும் சபித்துவிட்டார். உனக்கு இனி லிங்க வடிவில் மட்டுமே பூஜைகள் நடக்கும் என்று சொல்லிவிட்டு, இறுதியாக வைகுண்டத்துக்கு சென்றார்.
ஆனால் கர்வத்தை அடக்க காத்திருந்த மகாவிஷ்ணு வேண்டுமென்றே துயில் கொண்டிருந்தார். இந்த இடத்திலும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்த பிருகு முனிவருக்கு கோபம் அதிகமானது. தனது பாதத்தால் பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். குழந்தை தந்தையை உதைத்தால் தந்தைக்கு வலிக்குமா என்ன? மகாவிஷ்ணுவுக்கு வலிக்க வில்லை. ஆனால் குழந்தையின் துடுக்குத்தனத்தை போக்க வேண்டாமா, பிருகு முனிவரின் பாதம் வலிக்குமே என்று பாதத்தை பிடிப்பது போல் பிடித்து அவரது பாதத்திலிருந்து ஞானக் கண்ணை பிடுங்கி எரிந்துவிட்டார். எட்டி உதைத்த நிலையிலும் தன்னை கண்டிக்காத மகாவிஷ்ணுவுக்கு தான் யாகத்தின் பலன் என்று முடிவு செய்தார்.
Lagnam : ஜாதகத்தில் லக்னம் என்பது என்ன எப்படி கணிக்கப்படுகிறது?
ஆனால் பெருமாளின் மார்பில் வசிப்பது தாயாரம்மாவாயிற்றே. தான் வசிக்கும் இடத்தை பிருகு உதைத்து விட்டது கோபம் என்றால் அதை கண்டிக்காத. பெருமாள் மீதும் கோபம் உண்டாயிற்று. அதனால் கோபத்தில் பெருமாளிடம் கோபித்து கொண்டு ஆகாசராஜனின் மகளாக அவதரித்தாள். தாயாரம்மாள் இல்லாமல் வேங்கடவன் எப்படி இருப்பார். அவரும் தாயாரம்மாளை தேடி அவளை மணமுடிக்க வகுளாதேவிக்கு மகனாக பிறந்தார். அவர் வேடனாக வேடம் பூண்டு பத்மாவதியை சந்தித்தார்.
சிறிது சிறிதாக வளர்ந்துகொண்டே வரும் நந்திபகவான்!
வேடனாக இருந்தவருக்கு எப்படி ஆகாசராஜனின் மகளை கொடுப்பான். பத்மாவதியை மணப்பதற்கு செல்வம் வேண்டாமா? அதற்காக குபேரனிடம் சென்று கடன் வாங்கினார். அதன்பிறகுதான் பத்மாவதியை கரம்பிடித்தார். ஆனால் பாருங்கள். பெருமாளால் இன்றுவரை கடன் தீர்க்கமுடியவில்லை. இன்னும் குபேரனிடம் கடன் பெற்ற கடனாளியாகவே இருக்கிறார்.
ஏழு மலையை தாண்டி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோடி கோடியாக கொட்டினாலும் இன்னும் கடன் தீர்க்க முடியாத கடனாளியாகவே இருக்கிறார் என்று சொல்வதன் வரலாறு இதுதானாம்.