வியாழன் அன்று மஞ்சள் நிற ஆடையை அணிந்தால் ரொம்ப நல்லது.. விஷ்ணு ஆசியை பெற இப்படி பண்ணுங்க..!

By Ma Riya  |  First Published Feb 23, 2023, 7:25 PM IST

வியாழன் அன்று மஞ்சள் நிற ஆடைகளை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. 


இந்து புராணங்களில், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கும், செவ்வாய்கிழமை அனுமனுக்கும், வியாழன் விஷ்ணுவுக்கும், சாய்பாபாவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலகை படைத்தவர் பிரம்மன், அழிப்பவன் சிவன், உலக ரட்சகன் விஷ்ணு ஆவார்கள். இந்து மதத்தில் விஷ்ணுவின் பங்கு, பூமியில் ஏற்படும் பிரச்சனையின் போது நன்மை, தீமையின் சமநிலையை மீட்டெடுப்பதாகும். 

வியாழக்கிழமை, வேதபுராணங்களின்படி விஷ்ணு மற்றும் சாய்பாபாவுடன் தொடர்புடையது. இந்த கடவுள்களில் விஷ்ணு, மஞ்சள் நிறத்தை அதிகம் விரும்புகிறார். அதனால் அவர் பீதாம்பர தாரி என்றும் அழைக்கப்படுகிறார். வியாழன் அன்று மஞ்சள் நிற ஆடைகளை அணிய விரும்புகிறார்கள். பக்தர்கள் அன்றைய தினம் கோயில்களுக்குச் சென்று நெய் மற்றும் பால் சமர்ப்பித்து விரதம் மேற்கொள்கின்றனர். 

Tap to resize

Latest Videos

வியாழன் மஞ்சள் நிற ஆடை 

பிற கிரகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவர் வியாழன். இவரை பிருஹஸ்பதி என்றும் அழைக்கிறார்கள். வியாழக்கிழமையை ஆளும் கிரகம் வியாழன். விஷ்ணு இறைவனின் உச்ச குருவாக, பல சந்தர்ப்பங்களில் அவருக்கே அறிவுரை கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. மஞ்சள் நிறம் வியாழனின் நிறமாகவும், அன்பின் நிறமாகவும் கருதப்படுகிறது. அதாவது ஜோதிடத்தில் வியாழன் ஒரு நல்ல அடையாளமாக கருதப்படுகிறது. இந்நாளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தால் இருவரது ஆசிகளும் கிடைக்கும். வியாழன் கிரகம் பலவீனமாக இருந்தால் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது நல்லது. மஞ்சள் துணியில் போர்த்தப்பட்ட மதப்பொருட்களை நீங்கள் அடிக்கடி பார்ப்பதற்கு இதுவே காரணம். 

இதையும் படிங்க: கோடீஸ்வரர் மகள் என்றால் கேட்கவா வேணும்.. ரூ.90 கோடி மதிப்பில் லெஹங்கா உடுத்தி இஷா அம்பானி செய்த காரியம்..

விஷ்ணுவை மகிழ்விப்பதற்கான வழிகள் 

விஷ்ணு மந்திரத்தை உச்சரிப்பது விஷ்ணுவை மகிழ்விப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். விஷ்ணு மந்திரத்தை உச்சரிக்க சிறந்த நேரம் பிரம்ம முகூர்த்தம் நேரமான காலை 4 முதல் 6 மணி வரை ஆகும். விஷ்ணு மந்திரத்தை எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் தெரியுமா? அதிகாலையில் குளித்துவிட்டு பாய் அல்லது மரப்பலகையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் முன் விஷ்ணுவின் உருவத்தை வைத்து, விஷ்ணு மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். 

பலன்கள் 

விஷ்ணு மந்திரம் சொல்வதால் பல நன்மைகள் கிடைக்கும். விஷ்ணு மந்திரத்தை உச்சரிப்பதால் ஆரோக்கியமும், செல்வமும் பெருகும். எவ்விதமான எதிர்மறையையும் தடுத்து மனதை அமைதிப்படுத்துகிறது. வீட்டில் தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை விலக்கி வைக்க விஷ்ணு பகவான் உதவுவார். 

இதையும் படிங்க: இத்தனை கோடியா சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி கல்யாண செலவு? கியாரா திருமண ஆடை வடிவமைக்கவே 24 வாரம் ஆச்சு

click me!