கோயம்புத்தூர் ஈஷா யோகா மையம் நடத்தும் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் மார்ச் 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் ஈஷா யோகா மையம் இந்த ஆண்டின் மிகப்பெரிய திருவிழாவான ஈஷா மஹாசிவராத்திரி 2023-ஐ நடத்தத் தயாராகி வருகிறது. இந்த இரவு திருவிழா மார்ச் 18 அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை சத்குரு முன்னிலையில் நடைபெறும். அப்போது அரங்கேறும் இணையற்ற இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும், வழிகாட்டப்பட்ட தியானங்களில் கலந்துகொள்ளவும் லட்சக்கணக்கானவர்கள் ஈஷா யோகா மையத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஷா மஹாசிவராத்திரி 16 மொழிகளில் ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் பல்வேறு பிராந்திய மொழிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய தொலைக்காட்சிச் சேனல்களிலும் ஒளிபரப்பப்படும்.
undefined
மஹாசிவராத்திரியின் முக்கியத்துவத்தை விளக்கும் சத்குரு, “மஹாசிவராத்திரி – மதம், இனம் அல்லது தேசம் சார்ந்த நம்பிக்கை அல்ல; கிரக நிலைகள் மனிதர்களிடம் இயற்கையான ஆற்றல் எழுச்சியை ஏற்படுத்தும் இரவுதான் மஹாசிவராத்திரி. பிரபஞ்ச அளவில் தாக்கம் செலுத்தக்கூடிய பெருநிகழ்வு என்பதை உணர்ந்து அனுபவியுங்கள்” என்று சொல்கிறார்.
ஈஷா மஹாசிவராத்திரி தியானலிங்கத்தில் பஞ்ச பூத ஆராதனையுடன் தொடங்கும். தொடர்ந்து லிங்க பைரவி மகா யாத்திரை நடைபெறும். அதற்குப் பின் சத்குருவின் சொற்பொழிவு, நள்ளிரவு தியானங்கள் ஆகியவை நடக்கும். பின் கண்கவர் 3D ப்ரொஜெக்ஷன் வீடியோ மூலம் ஆதியோகி திவ்ய தரிசனம் அரங்கேறும்.
ராஜஸ்தானி நாட்டுப்புற பாடகர் மாமே கான், சிதார் மேதை நிலாத்ரி குமார், டோலிவுட் பாடகர் ராம் மிரியாலா மற்றும் தமிழ் பின்னணிப் பாடகர் வேல்முருகன் என பல கலைஞர்கள் நாட்டின் வெவேறு பகுதிகளில் இருந்து வந்து ஆடல் பாடல் நிகழவுகளில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளான ஈஷா அறக்கட்டளையின் ‘ஈஷாவின் ஓசை’ (Sounds of Isha) இசை நிகழ்ச்சியும் ஈஷா சம்ஸ்கிருதியின் நடன நிகழ்ச்சியும் நடைபெறும். இவை நிச்சயம் அந்த இரவின் மாய உணர்வை மேலோங்கச் செய்பவையாக இருக்கும்.
இன்ஸ்டாகிராமில் பின்தொடர:
https://www.instagram.com/p/CoHdLttrOyu/
கடந்த சில ஆண்டுகளாக, ஈஷாவின் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் நேரடி ஒளிபரப்பு அனைத்து ஸ்ட்ரீமிங் சாதனைகளையும் தகர்த்த பெயர் பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு நடந்த மஹாசிவராத்திரி நிகழ்வு 192 நாடுகளில் 22 மொழிகளில் ஒளிபரப்பப்பட்டது. 14 கோடி பேர் நேரடி ஒளிபரப்பைப் பார்வையிட்டனர். 2021ஆம் ஆண்டில், மார்ச் 14 அன்று ஒளிபரப்பப்பட்ட கிராமி விருதுகள் ஒளிபரப்பை விட, மார்ச் 11-12 அன்று நடந்த மஹாசிவராத்திரி நிகழ்வின் ஆன்லைன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகமாக இருந்தது.
ஈஷா மஹாசிவராத்திரியை யூடியூபில் நேரடியாகப் பார்க்க:
https://www.youtube.com/watch?v=civCatwZmaU
ஈஷா மஹாசிவராத்திரிக்கு முன்னதாக, ருத்ராட்ச தீட்சை, கிரேஸ் ஆஃப் யோகா நிகழ்ச்சி, யாக விழா, மஹா அன்னதானம், மகா சிவராத்திரி சாதனா போன்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பக்தர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
யோகாவின் அருளில் - சத்குருவுடன் நேரலை நிகழ்வு
‘யோகாவின் அருளில்’ என்பது மஹாசிவராத்திரியில் ஓர் சிறப்பு நிகழ்வு. ஆன்மிக அனுபவத்தைத் தேடுபவர்களுக்கு இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இணையற்ற இந்த நிகழ்வு சத்குருவின் அருளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. சக்தி வாய்ந்த செயல்முறைகள் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானங்கள் மூலம் பங்கேற்பாளர்களின் நல்வாழ்வுக்கு பஞ்ச பூதங்களும் பயன்பட சத்குரு உதவி புரிகிறார். இந்த நிகழ்ச்சி ஆன்லைனில் 9 மொழிகளில் வழங்கப்படுகிறது. 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
https://isha.sadhguru.org/in/en/grace-of-yoga
ருத்ராட்ச தீட்சை - ஈஷா வழங்கும் இலவச பிரசாதம்
‘ருத்ராட்சம்’ என்ற சொல்லுக்கு ‘சிவனின் கண்ணீர்’ என்று பொருள். ருத்ராட்சம் அதனை அணிபவர்களுக்கு பல உடல், மன மற்றும் ஆன்மிக நன்மைகளை வழங்குகிறது. மஹாசிவராத்திரியின் சக்திவாய்ந்த இரவில் சத்குரு ருத்ராட்சத்தை பிரதிஷ்டை செய்வார். இணையத்தில் பதிவு செய்து இந்த ருத்ராட்சப் பிரசாதத்தை இலவசமாகப் பெறலாம்.
இலவச ருத்ராட்ச தீட்சைக்கு இங்கே பதிவு செய்யுங்கள்:
https://mahashivarathri.org/en/rudraksha-diksha
ஆன்மிக மற்றும் கலாச்சாரத் திருவிழா
இந்த ஆண்டு, ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15 முதல் 17 வரை இரவு 7 மணிக்கு யக்ஷ திருவிழா நடைபெறும். இந்த மூன்று நாள் திருவிழாவில் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடனம் நிகழ்ச்சிகள் நடக்கும். இதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
மஹா அன்னதானம்
கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். இதற்காக மஹாசிவராத்திரி இரவிலும் அடுத்தடுத்த ஏழு நாட்களிலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர்.
படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
நேரடி ஒளிப்பரப்பைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.
மஹாசிவராத்திரி பற்றி மேலும் அறிய விரும்பினால், +91 94874 75346 என்ற எண்ணுக்கு அழைக்கவும். அல்லது: mediarelations@ishafoundation.org க்கு எழுதவும்.