Latest Videos

ஆண்களே! உடனே இந்த பழக்கத்தை மாத்துங்க.. இல்லனா லட்சுமி அருள் கிடைக்காது.. கையில் பணம் தங்காது!

By Kalai SelviFirst Published Jun 28, 2024, 10:00 AM IST
Highlights

Bad Habits For Men : ஒரு ஆண் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அவர் தொடர்ந்து வறுமையில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்களே..

ஒரு ஆண் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அவர் தொடர்ந்து வறுமையில் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்களே..ஆம், ஒரு ஆண் இரவு பகல் என பாராமல் தன் குடும்பத்திற்காக மெகாவும் கடினமாக உழைத்தாலும் அவரிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்களால் அவரால் தன் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு மாற்ற முடியாது. இதனால் அவரது குடும்பம் எப்போதும் வறுமையில் தான் இருக்கும்.

அதுமட்டுமின்றி, அவர் கடினமாக உழைத்தாலும் கூட வெற்றி, உயர் பதவி போன்றவற்றை அடைய வாய்ப்பே இல்லை. எனவே, அவர்கள் தங்களது சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் அவர்களது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். ஆகையால், லட்சுமி தேவியின் அருள் கிடைக்க ஆண்கள் என்னென்ன பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண்களே இந்த பழக்கத்தை கைவிடுங்கள்:

பெண்களை இழிவுப்படுத்துவது:
ஒரு ஆண் தன் மனைவியை இழிவுபடுத்துவது, அவளை அடித்து துன்புறுத்துவது, அவளிடம் மோசமாக நடந்து கொள்வது மற்றும் அவளிடம் துஷ்பிரயோகம் செய்வது இது போன்ற பல விஷயங்களால், தான் அந்த ஆணின் வீட்டில் வறுமை வருவதற்கு முக்கிய காரணம். இப்படி ஒரு வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க விரும்புவதில்லை. இதனால் அவர்கள் எப்போதும் கடனில் இருப்பார்கள். ஒருவேளை அவர்களிடம் பணம் இருந்தாலும் அது நீண்ட காலத்திற்கு தங்காது.

இதையும் படிங்க:  Vastu Tips : இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் வறுமையும், துன்பமும் உங்களை நெருங்கும்!

சோம்பேறித்தனம்:
அதுபோல, காலையில் சூரியன் உதித்த பிறகும் பல ஆண்கள் படுக்கையில் இருந்து எழ விரும்புவதில்லை. இதுதவிர, அவர்கள் பல் துலக்கவும் குளிக்கவும் சோம்பேறித்தனம் படுகின்றன. அதுமட்டுமின்றி, அவர்கள் பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல், கண்ட கண்ட இடங்களில் வைக்கும் பழக்கம் இருக்கும். இப்படிப்பட்டவர்களை லட்சுமி விரும்புவதில்லை மற்றும் அவர்களிடம் தங்கவும் மாட்டாள். லட்சுமி தேவி இல்லாத வீட்டில் சண்டை சச்சரவுகள், பதற்றம், எதிர்மறை ஆற்றல், வறுமை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். முக்கியமாக அந்த ஆணின் கையில் ஒருபோதும் பணம் தங்கவே தங்காது.

இதையும் படிங்க: உங்க வீட்ல பணம் கொட்ட பக்காவானா டிப்ஸ் இதுதாங்க..! உடனே செய்ங்க..!!

வேலையை சரியாக செய்யாமல் இருப்பது:
ஒரு ஆண் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாமல் ஏனோதானோ என்று இருந்தால் அவரிடம் பணம் ஒருபோதும் தாங்காது. அதுமட்டுமின்றி, ஒழுக்ககேடாக நடந்து கொள்வது, வீண் விஷயங்களில் ஈடுப்பட்டு நேரத்தை வீணடிப்பது, தவறான நண்பர்களுடன் பழக்கத்தை வைத்துக் கொள்வது என இதுபோன்ற குணம் கொண்டிருக்கும் ஆண் வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேற்றத்தை காண முடியாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!