Family Issues : குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் வருதா? கவலையை விடுங்க.. இந்த ஒரு பரிகாரம் மட்டும் போதும்!

Published : Jun 27, 2024, 09:45 AM ISTUpdated : Jun 27, 2024, 12:07 PM IST
Family Issues : குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் வருதா? கவலையை விடுங்க.. இந்த ஒரு பரிகாரம் மட்டும் போதும்!

சுருக்கம்

Astrology Remedy for Family Issues : வீட்டில் சண்டை சச்சரவுகள் தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

குடும்பம் என்றாலே அந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவது இயல்புதான். சண்டே சச்சரவுகள் வராத குடும்பமே இல்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டைகள் வருவது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. ஆனால், அந்த சண்டையானது தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால், அந்த வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்காது. அதுவும், குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவி சண்டைதான் பெரிய சண்டையாக இருக்கும். 

இப்படி குடும்பத்தில் பிரச்சினைகள் நீடித்துக் கொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம் முன்னோர்களின் ஆசிர்வாதம் இல்லாதது தான். ஆகையால், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டை தவறாமல் செய்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, குடும்பத்தில் பிரச்சனைகள் தீர, நிம்மதி நிலவ சில பரிகாரங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். எனவே, அந்த பரிகாரங்களில் ஒன்றை பற்றி இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  குழந்தை பாக்கியம் கிடைக்க சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்.. உடனே செய்ங்க..

குடும்பத்தில் பிரச்சனைகள் தீர பரிகாரம்:
பரிகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 

வெள்ளை துணி ஒன்று, வெற்றிலை நான்கு, கொட்டைப்பாக்கு இரண்டு, பச்சரிசி  ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்று, விரலி மஞ்சள் இரண்டு மற்றும் வெள்ளை பேப்பர் ஒன்று ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  கெட்ட கனவுகள் வராமல் இரவு நிம்மதியாக தூங்க.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க.. ரொம்ப சிம்பிள்!

பரிகாரம் செய்யும் முறை:
இந்த பரிகாரத்தை செய்ய முதலில் எடுத்து வைத்த வெள்ளை பேப்பரில், வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் பெயரை எழுதவும். பிறகு வெள்ளை துணியில் வெற்றிலை, கொட்டை பாக்கு, பச்சரிசி, மஞ்சள் தூள், ஒரு ரூபாய் நாணயம் மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றை போடவும். இதனுடன் முன்னோர்களின் பெயர்கள் எழுதி வைத்த பேப்பரையும் மடித்து அதில் போடவும். பிறகு அந்த துணியை முடிச்சு போட்டு, பூஜை அறையில் வைத்து, ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் எப்போதும் பூஜை செய்வது போல் செய்ய வேண்டும். 

நீங்கள் வழிபடும்போது, உங்கள் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் நினைத்து வீட்டில் உள்ள பிரச்சனைகளை அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு இந்த முடிச்சிக்கு தீபாரதனை கற்பூரம் ஆராதனை சாம்பிராணி தூபம் ஆகியவற்றை காட்டவும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பூஜை அறையில் இருக்கும் இந்த முடிச்சினை வைத்து வழிபாடு செய்து வந்தால், முன்னோர்களின் ஆசியை பெறுவீர்கள். இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் சூழ்ந்து இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!