நிலம் இருந்தும் வீடு கட்ட முடியவில்லையா..? உடனே இந்த 2 பரிகாரங்கள் செய்ங்க.. வீடு கட்டுவது உறுதி!

Published : Jun 24, 2024, 10:03 AM ISTUpdated : Jun 24, 2024, 10:14 AM IST
நிலம் இருந்தும் வீடு கட்ட முடியவில்லையா..? உடனே இந்த 2 பரிகாரங்கள் செய்ங்க.. வீடு கட்டுவது உறுதி!

சுருக்கம்

சொந்த வீடு கனவு நிறைவேற இந்த இரண்டு பரிகாரங்களை மட்டும் செய்தால் போதும். அவை..

ஒவ்வொரு நபரும் தனக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் தனக்கென ஒரு வீடு இல்லை என்றால் அது மன குறையாகவும், ஏக்கமாகவும் இருக்கும். இன்னும் சிலருக்கு சொந்த வீடு குறித்த கனவு, அவர்களின் வாழ்நாள் முழுவதும் அது கனவாகவே மட்டுமே இருக்கும். பல சமயங்களில் ஒருவர் கடுமையாக முயற்சி செய்தும் கூட தனது கனவை நிறைவேற்ற முடியாமல் போகிறது. இன்னும் சிலரோ எத்தனையோ கோவில்களுக்கு சென்று, எத்தனையோ பூஜைகள் செய்தும் அவர்களது கனவை நிறைவேற்ற முடியவில்லை. 

பலரோ தனது சொந்த நிலத்தில் வீடு கட்ட முடியவில்லை என்ற துக்கத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே இரண்டு பரிகாரங்களை மட்டும் செய்தால் போதும், சொந்த வீடு கனவு நிறைவேறும். இப்போது அந்த இரண்டு பரிகாரங்கள் என்னென்ன, அது செய்யும் முறை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  Vastu Tips: வீட்டின் பிரதான வாசலில் ஒருபோதும் செருப்பு வைக்கக்கூடாது? மோசமான விளைவை ஏற்படுத்தும்..!!

சொந்த வீடு கனவு நிறைவேறுவதற்கான 2 பரிகாரங்கள்:

ஒன்று... 
தனக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். பிறகு விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனரை மனதில் நினைத்து, சொந்த வீடு கனவு நிறைவேற வேண்டும் என்று முழு மனதுடன் வழிபாடு செய்து, அந்த விளக்கை வீட்டில் தென்மேற்கு மூலையில் ஏற்றி வைக்க வேண்டும். முக்கியமாக, மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.

இதையும் படிங்க: உங்கள் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த 5 பகுதிகளை இப்படி வையுங்க..!!

இரண்டாவது..
உங்கள் வீட்டில் காமாட்சி அல்லது கஜலட்சுமி விளக்கு இருக்கிறதா..? ஒருவேளை அப்படி இல்லை என்றால் நீங்கள் பயன்படுத்தும், ஏதாவது ஒரு விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அந்த விளக்கை நன்கு சுத்தம் செய்து, அதில் மஞ்சள், குங்குமம் வைத்து மற்றும் வாசனை மிகுந்த வெள்ளை நிற பூக்களை அதில் சாத்த வேண்டும். இதனை அடுத்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றினை எடுத்து அதை விளக்கிற்குள் போட்டு, அதில் நெய் அல்லது என்னை ஊற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு சிறிய தட்டின் மேல் மஞ்சள் குங்குமம் வையுங்கள். பிறகு அதன் மீது ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து ஏற்கனவே, தயாரித்து வைத்து விளக்கை இதன் மீது வைத்து ஏற்ற வேண்டும். தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றி வந்தால் சொந்த வீடு கட்டுவதற்கான கனவு நிறைவாகும்.

ஐந்து ரூபாய் நாணய ஏன்?:
ஐந்து ரூபாய் நாணயம் என்பது குபேரனுக்கு உரியதாகும். எனவே இதை விலக்கி போட்டு ஏற்றினால் வீடு கட்டுவதற்கான பணம் அல்லது வாங்குவதற்கான பணம் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த விளக்கை நீங்கள் ராகு கேது தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களையும் குறிக்கும் நேரத்தில் ஏற்ற வேண்டும்.ஏனெனில், இந்த கிரக நேரத்தில் விளக்கேற்றினால் நவகிரகங்களின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!