Latest Videos

இந்த ஒரு சிவன் கோயில் 1000 சிவன் கோயிலுக்கு சமம்.. எங்க இருக்கு  தெரியுமா...?

By Kalai SelviFirst Published Jun 25, 2024, 10:00 AM IST
Highlights

பிரம்மசூத்திரம் அடங்கிய சிவன் கோவிலுக்கு ஒரு முறை சென்றால், ஆயிரம் சிவலிங்கங்களை தரிசித்த பலனும் புண்ணியமும் கிடைக்குமாம்.

பிரம்மசூத்திரம் அடங்கிய சிவன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தாலே 1000 சிவலிங்கங்களை தரிசித்த பலனும், புண்ணியமும் கிடைக்கும் என்று கோயில் வரலாறு சொல்லுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பல அதிசயங்களை கொண்ட அந்த சிவன் கோவிலானது, ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ளது. இந்த கோவிலானது, இந்தியாவில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்ரீமுகலிங்கம் கிராமத்தில் இருக்கும் சோமேஸ்வரசுவாமி கோவிலின் தனித்தன்மையை அறிந்து, அங்கு இருக்கும் சிவனை தரிசித்து வந்தால் பல கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பொதுவாகவே, அனைத்து கோயில்களும்  கிழக்கு திசை நோக்கி பார்த்து தான் இருக்கும். ஆனால், ஆந்திராவில் இருக்கும் இந்த சோமேஸ்வரசுவாமி கோவிலானது மேற்கு திசை நோக்கி பார்த்து அமைந்திருக்கும். அதுமட்டுமின்றி, சோமேஸ்வரசுவாமி ஆலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிவலிங்கத்தின் மீது மாலை நேரத்தில் சூரிய ஒளியும், இரவில் சந்திரனின் கதிர்களும் விழும். இது பார்ப்பதற்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும். இந்த அதிசயத்தைக் காண்பதற்காகவே நாட்டில் பல இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இதையும் படிங்க:  Shiva Lingam : சிவ வழிபாட்டிற்கு உகந்த 3 முக்கிய லிங்கங்கள்.!!

இவ்வுளவு பெருமை வாய்ந்த இந்த கோவிலுக்கு புராணக் கதைகளும் உண்டு. அதாவது, புராணத்தின்படி, தக்ஷ என்ற மகாராஜாவிற்கு 64 மகள்கள் இருந்தார்களாம். அவர்களில் 27 பேரை மட்டும் தக்ஷன் சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்ததாக கோவில் வரலாறு கூறுகிறது. ஆனால், சந்திரனோ தாரா, ரோகிணி என்ற பெயருடைய இரண்டு மனைவிகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்ததால், இனி சந்திரனோடு சேர்ந்து வாழப்போவதில்லை மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டாகதாக சொல்லப்படுகின்றது. 

இதையும் படிங்க: விரைவில் திருமணம் நடக்க "சோமவார விரதம்".. கடைபிடிக்கும் முறை மற்றும் அதன் பலன்கள்!!

இதனால் கோபம் கொண்ட தக்ஷா உடனே சந்திரனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால், சந்திரனோ இதை பற்றி கண்டு கொள்ளவில்லை. தன் பேச்சை மதிக்காத காரணத்தால்,  தக்ஷன் சந்திரனுக்குத் தொழுநோய் வரும்படி சாபமிட்டாராம். சாபத்தை பெற்ற சந்திரன் அதை போக்க  பல புண்ணிய நதிகளில் நீராடினார். ஆனால் தொழுநோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த சந்திரன் இனி தனக்கு தொழு நோய் குணமாகாது என்று எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், வம்சதாரா நதியில் சில நாட்கள் குளித்தால் தொழுநோய் குணமாகும் என்று புராணங்களில் எழுதப்பட்டிருப்பதை அறிந்த சந்திரன், அங்கு சென்று வரலாறு கூறியபடியே செய்து குணமானார்.

இதனை அடுத்து, சந்திரன் தனது கரங்களால் மேற்கு திசை நோக்கி இருக்கும் பிரம்மசூத்திரத்துடன் கூடிய சிவலிங்கத்தை அங்கு நிறுவினார். இதனால் தான் இந்த பிரம்மசூத்திர லிங்கத்தை ஒருமுறை தரிசனம் செய்வது ஆயிரம் சிவலிங்கங்களை தரிசனம் செய்ததற்கான பலனைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகின்றது. மேலும், இந்தக் கோயிலுக்கு சென்று இங்கு இருக்கும் சிவ லிங்கத்தை தரிசித்து, சிவனுக்கு அபிஷேகம் செய்தால், உடலில் உள்ள நாள்பட்ட நோய்கள் தீரும் என கோயில் வரலாறு சொல்லுகிறது. இதன் காரணமாகவே தான், இந்த சோமேஸ்வரசுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கானvபக்தர்கள்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!