MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vastu Tips : இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் வறுமையும், துன்பமும் உங்களை நெருங்கும்!

Vastu Tips : இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் வறுமையும், துன்பமும் உங்களை நெருங்கும்!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த 5 பொருட்களை உங்கள் வீட்டில் வைத்தால், அது உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலுக்கு வழிவகுக்கும். இதனால், நீங்கள் வாழ்க்கையில் துக்கங்களை சந்திக்க நேரிடும். 

1 Min read
Kalai Selvi
Published : Jun 03 2024, 10:16 AM IST| Updated : Jun 03 2024, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பெரும்பாலும் வீட்டில் வைக்கப்படும் சில பொருட்களால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த 5 பொருட்களை உங்கள் வீட்டில் வைத்தால், அது உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலுக்கு வழிவகுக்கும். இதனால், நீங்கள் வாழ்க்கையில் துக்கங்களை சந்திக்க நேரிடும்.

26

உடைந்த பொருட்கள்: உடைந்த பாத்திரங்கள், கண்ணாடிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், புகைப்படங்கள், படுக்கை, கடிகாரம், விளக்கு, விளக்குமாறு, குவளை, கோப்பை போன்றவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. இதன் மூலம், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைந்து உங்களுக்கு பிரச்சினைகளை உண்டாகும். அதுமட்டுமின்றி, லட்சுமியின் வருகையும் நின்றுவிடும்.

36

பழைய, கிழிந்த துணிகள்: பெரும்பாலானோர், தங்கள் வீட்டில் பழைய மற்றும் கிழிந்த துணிகளை மூட்டை மூட்டையாக  வைத்திருப்பார்கள். கிழிந்த துணிகள் (அ) பெட்ஷீட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். 

46

குப்பைகள்: பலர் தங்களது வீட்டிற்கு முன் குப்பைகளை குவித்து வைத்திருப்பார்கள். நீங்களும் இதைச் செய்தால் கவனமாக இருங்கள். ஏனெனில், இது வீட்டிற்கு லட்சுமி வருவதைத் தடுப்பது மட்டுமின்றி,  உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தடுக்கும்.

இதையும் படிங்க:  மறந்தும் கூட 'இந்த' பொருட்களை பிறருக்கு கடனாக கொடுக்காதீங்க! வீட்டில் தரித்திரம் வருமாம் தெரியுமா..?

56

கிழிந்த பணப்பை: நேர்மறை ஆற்றலை அதிகரிக்கு புனிதமான பொருட்களை உங்கள் பணப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, 
கிழிந்த பணப்பையை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

இதையும் படிங்க:  Vastu Tips : பணத்தை எண்ணும் போது இந்த தவறை செய்யாதீங்க.. துரதிஷ்டம் வரும்!

66

உடைந்த சிலை: பழைய கிழிந்த படங்களையோ, உடைந்த கடவுள் சிலைகளையோ வீட்டில் ஒருபோதும் வைக்கக் கூடாது. இதனால் பொருளாதார இழப்பு ஏற்படும். இதைத் தவிர வீட்டில் ஏராளமான தெய்வப் படங்களை வைக்க கூடாது.  இதனால் வாஸ்து தோஷங்கள் தான் உண்டாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved