இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையின் முக்கியமான அங்கம் அந்த மாதம் முழுவதும் நோன்பு இருப்பதாகும். இஸ்லாமியர் அல்லாத அனைவரும்கூட இதைப்பற்றி சரியாகப் புரிந்துகொண்டிருப்பது அவசியம்.
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையின் முக்கியமான அங்கம் அந்த மாதம் முழுவதும் நோன்பு இருப்பதாகும். இஸ்லாமியர் அல்லாத அனைவரும்கூட இதைப்பற்றி சரியாகப் புரிந்துகொண்டிருப்பது அவசியம்.
ஈத் என்று குறிப்பிடப்படும் ஈகைத் திருநாளான ரமலான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை நோன்பு இருக்கிறார்கள். புனிதமான ரமலான் மாதத்தில் தினமும் மாலையில் தொழுகை மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெறும். இந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் வேறு வேலைகளை ஈடுபடுவதற்கு முன்வருவதில்லை.
undefined
விருத்தும் பிரியாணியும் மட்டுமா?
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுடன் பழகும் நெறிமுறைகளைக் கற்றுக்கொள்ள பெரும் பகுதியினர் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலானவர்கள் சில முஸ்லிம் நண்பர்கள் நோன்பு நோற்காமல் இருப்பதை வைத்து தவறான புரிதலை அடைகிறார்கள். யாரும் அவர்களுக்குச் இதுகுறித்து எடுத்துச் சொல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனால், பலருக்கும் ரமலான் நோன்பு என்றாலே அது மாலை நேர விருந்தும் பிரியாணியும் என்ற அளவில்தான் மனதில் பதிந்திருக்கிறது.
விண்வெணியில் இருந்து வந்த ரமலான் வாழ்த்து! வைரல் ஆன சுல்தான் அல்-நெயாடியின் வீடியோ!
ரமலான் நோன்பு
ரமலான் மாதம் நோன்பைப் பற்றியது என்பதை மற்ற மதங்களைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் அறிந்திருக்க வேண்டும்; இப்தார் என்பது ஒரு 'பார்ட்டி' அல்ல. தவறான புரிதல் கொண்ட சிலர் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்களை நோக்கி, "நீங்கள் இரவு முழுவதும் சாப்பிட்டுவிட்டு பகலில் விரதம் இருப்பீர்கள்!" என்று கேலியாகப் பேசுகிறார்கள். இஸ்லாமியர்களைப் பற்றிய புரிதல் இன்மையைக் காட்டுகிறது.
இப்தார் நோன்பு திறப்பு என்பது நண்பர்களுடன் சேர்ந்து நன்றாக சாப்பிடுவது பற்றியது அல்ல. இரண்டு வேளை உணவுக்குக்கூட வாய்ப்ப இல்லாமல் பசியால் வாடுபவர்களின் கஷ்டத்தை உணர்ந்து, அதன் மூலம் தங்களுக்கு அளிக்கப்பட்ட உணவுக்காக அல்லாவுக்கு நன்றி செலுத்துவதற்குத்தான் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்தார் நோன்பு
"நீங்கள் எங்களை இப்தார் விருந்துக்கு அழைக்கவில்லை" என்று முஸ்லிம் நண்பர்களிடம் புகார் கூறுவது சரியல்ல. இப்தார் விருந்து அன்றைக்கு முழுவதும் நோன்பு கடைபிடித்தவர்களுக்கு மாலையில் விருந்தளிக்கும் நிகழ்வு ஆகும். இதில் பிற மதங்களைச் சார்ந்தவர்களும் பங்கேற்க விரும்பினால், நோன்பைக் கடைபிடித்து இப்தார் விருந்திலும் கலந்துகொள்ளலாம். இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் இப்தார் விருந்து நிகழ்வுகள் ஆண்டுதோறும் பல இடங்களில் நடப்பதைப் பார்த்திருக்கலாம். இவற்றில் பங்கேற்பது இஸ்லாமியர்களுடன் கொள்ளும் நட்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
அழைக்க வேண்டாம்!
இப்தார் நோன்பு திறப்பு நேரம் பொதுவாக மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையில் இருக்கும். அந்தந்தப் பகுதிகளில் இந்த நேரம் சற்று மாறுபடும். அப்போது இஸ்லாமியர்கள் குடும்பத்தினருடன் இப்தார் நோன்பு திறப்பில் ஈடுபட்டிருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்குப் போன் செய்வது, வீட்டிற்குச் சென்று சந்திப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது அவர்களுக்குச் செய்யும் உதவியாக இருக்கும்.
ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!