ஒரு நல்ல காரியங்களின் போது எப்போதும் முன்னோர்கள் ஒரு சில ஸ்லோகங்கள் கூறி வாழ்த்துவது வழக்கம். குறிப்பாக நல்ல விஷயங்கள் போது வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். அதிலும் ஆன்மீகம் கொண்ட மூதாதையர்கள் நீ தொட்ட காரியமெல்லாம் அட்சய பாத்திரம் போல வெற்றிக்கள் தொடரும் என்று வாழ்த்துவார்கள்.
ஒரு நல்ல காரியங்களின் போது எப்போதும் முன்னோர்கள் ஒரு சில ஸ்லோகங்கள் கூறி வாழ்த்துவது வழக்கம். குறிப்பாக நல்ல விஷயங்கள் போது வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். அதிலும் ஆன்மீகம் கொண்ட மூதாதையர்கள் நீ தொட்ட காரியமெல்லாம் அட்சய பாத்திரம் போல வெற்றிக்கள் தொடரும் என்று வாழ்த்துவார்கள்.
அது எதுவாகினும்.. அன்பாக இருந்தாலும் சரி, இன்பமாக இருந்தாலும் சரி, வெற்றியாக இருந்தாலும் சரி, சுப காரியங்களை வைத்து பிறரை வாழ்த்தும் போதும் சரி அட்சய பாத்திரமாய் அள்ள அள்ள குறையாத அளவிற்கு உங்களது அன்பும், செல்வமும், இன்பமும், வெற்றியும் பெருக வேண்டும் என கூறி பாருங்கள். வாழ்த்திய உங்களுக்கு மட்டுமின்றி, வாழ்த்து பெற்ற நெஞ்சமும் இன்பத்தில் நிறைந்துவிடும். அத்தனை சிறப்புகளை பெற்றது தான் அட்சய பாத்திரம்.
இதில் 'அட்சய’ என்பது வளருதல் என்று பொருள். அதனால் தான் அள்ள அள்ளக் குறையாமல் இருக்கிற பாத்திரத்தை, அட்சயப் பாத்திரம் என்று அழைத்தார்கள். ஆக, அட்சயம் என்பது வளருதல். சயம் என்பது கேடு என்று அர்த்தம். அட்சயம் என்பது, கேடு இல்லாத, அழிவு இல்லாத பொருள் என்கிறார்கள்.
இந்த அட்சய பாத்திரத்திற்கு பல கதைகள் உண்டு. அதில் முக்கியமாக அமைந்திருப்பது பாண்டவர்களின் கதை தான். மகாபாரதத்தில் பிரபலமானது சூதாட்டம் தான். பாண்டவர்கள் ஏமாந்து நின்ற தருணம் அது. இப்படி சூதாட்டத்தில் நாட்டை இழந்த விட்ட பாண்டவர்கள், திரவுபதியுடன் வனவாசத்திற்கு புறப்பட்டனர். பாண்டவர்களுடன் சில அந்தணர்களும், அவர்களது பத்தினிகளும் சென்றனர். அன்று இரவு கங்கைக் கரையில் இருந்த ஒரு ஆலமரத்தடியில் அனைவரும் தங்கினர்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே!! புத்தரே புகழ்ந்த பூர்ணாவின் கதை!!
அப்போது தர்மர் மட்டும் மிகுந்த வேதனையுடன் இருந்தான். காரணம் அவர்களை நம்பி இத்தனை நபர்கள் இருக்க அனைவரும் பட்டினியுடன் இருக்கின்றனரே என்று. உடனே தர்மர், "அந்தணர்களே! செல்வத்தை இழந்த நாங்கள், காட்டில் கிடைத்து வரும் காய், கனி வகைகளை தான் சாப்பிட்டு வாழப் போகிறோம். ஆனால், விலங்குகளும், அரக்கர்களும் வாழும் வனப்பகுதியில் உங்களால் எப்படி வாழ முடியும்.. உங்களால் இங்கு வாழவே முடியாது. தயவு செய்து நாட்டுக்குத் திரும்பி விடுங்கள்'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்.
அதற்கு அந்தணர்கள், "தர்மரே! எங்களுக்காக நீங்கள் மனம் வருந்த வேண்டாம். உங்களுக்கு பாரமாக நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். தங்களின் நன்மைக்காக ஜெபம் மற்றும் தவம் செய்திடுவோம். எங்களுக்கு தேவையான உணவை நாங்களே தேடிக் கொள்வோம். மனதிற்கு இனிமை தரும் நல்ல விஷயங்களையும், கதைகளையும் பேசிக்கொண்டு பொழுதை நல்ல முறையில் உங்களுடன் கழிப்போம்,'' என்று தெரிவிக்க, அவர்களின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தார் தர்மபுத்திரர்.
அதிர்ஷ்டம் போகலாம்.. அஷ்டலஷ்மி போகலாமா?
நாள் ஆக ஆக அவர்கள் மிகுந்த வறுமையில் இருந்தனர். சரியான உணவு இல்லாமல் தவித்து வந்தனர். இவர்களின் வறுமையைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களது பசியைப் போக்கினார். பாண்டவர்களுக்கும், திரெளபதிக்கும் அட்சயப்பாத்திரத்தின் மகிமையையும் அது பெறுவதற்குண்டான வழி முறைகளையும் போதித்தார். இராமயணத்தில் அகத்திய முனிவர் சூரிய உபாசனை செய்யும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை ஸ்ரீராமனுக்கு எப்படி உபதேசித்தாரோ, அதுபோல் சூரியபகவானை நினைத்து ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தைச் சொல்லுங்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பஞ்ச பாண்டவரகளிடம் கூறினார்.
பஞ்சபாண்டவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தின் படி சூரியபகவானை நினைத்து ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்து கடுந்தவம் புரிந்தனர். இவர்களது தவத்தை மெச்சிய சூரிய பகவான் அவர்கள் முன்பு தோன்றி, அட்சயப் பாத்திரத்தை கொடுத்தார். அட்சயபாத்திரத்தின் மகிமையை சொல்லும் போது இந்தப் பாத்திரத்தில் அன்னம், வேறு உணவு பதார்த்தங்களை நிரப்பினால் அப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் சுரந்து கொண்டே இருக்கும். உணவருந்திய பிறகு எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து, அட்சயப்பாத்திரத்தைக் கழுவி வைத்துவிட்டால் மறுநாள் சூரியோதயத்துக்கு பிறகுதான் அது மீண்டும் உணவளிக்கும் என்று அதன் பலனையும் சொல்லி மறைந்தார் சூரிய பகவான். இதையடுத்து தர்மர் திரவுபதியிடம் அதைக் கொடுத்தார். அதன் மூலம் அவள் அனைவருக்கும் உணவு பரிமாறினாள்.
அட்சயபாத்திரம் அள்ள அள்ளக் குறையாதது போல் உங்கள் வாழ்க்கையிலும் செல்வங்களும், வளமும் சேரட்டும் என்ற ஆசிர்வாதத்தை எல்லோருக்கும் கொடுங்கள்.. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி என்றும் மலர்ச்சியோடு இருக்கட்டும்.