பொதுவாக கிரகணத்தின் போது இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களின் கதவுகளும் மூடப்படும். இந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும் என்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களும் இதையொட்டி மூடப்பட்டுள்ளன. இருப்பினும், சூரிய கிரகணத்தின் போதும் திறந்திருக்கும் ஒரே கோவில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணமுகி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி கோவில் மட்டுமே.
கிரகணத்தின் போது வெளிப்படும் எதிர்மறை ஆற்றல், கோவிலுக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலைத் தூண்டும். வடிவமைப்பில் உள்ள சிறப்பு ஆற்றலின் ஒளியின் மீது சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கிரகணத்தின் போது அனைத்து கோவில்களின் கதவுகளும் மூடப்படுகிறது. ஆனால், ஸ்ரீ காளஹஸ்தியில் மட்டும் கதவுகள் மூடப்படாமல் இருப்பதற்கு ஒரு சிறப்புக் காரணம் உண்டு. அது பற்றிய விவரம் இதோ.
இதனாலேயே கிரகணத்தின் போது கதவு மூடப்படுவதில்லை.
ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நாட்டிலுள்ள மிகப் பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும். மேலும் அடிப்படையில் ஸ்ரீ காளஹஸ்தி கோவில் ராகு, கேது க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள சிவன் சிலை அனைத்து 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 ராசிகளையும் உள்ளடக்கியது. இதனாலேயே இந்த சிவனுக்கு சூரிய மண்டலம் முழுவதையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது.
Vastu Tips : வாடகை வீடுகளில் எப்படி வாஸ்து பார்ப்பது?
சூரியனையும் சந்திரனையும் ராகு மற்றும் கேது விழுங்கும்போது கிரகணங்கள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது, இது சூரிய அல்லது சந்திர கிரகணங்களுக்கு வழிவகுக்கும். இருப்பினும், ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் ராகு மற்றும் கேது இருவரையும் வழிபடுகிறோம். எனவே, கிரகணத்தால் கோவிலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
இங்கு ராகு மற்றும் கேது இருவரும் சிவன் மற்றும் பார்வதி ஆகியோருடன் இணைந்துள்ளனர். புராணங்களின்படி, கேது என்ற ஐந்து தலை பாம்பு சிவபெருமானின் தலையை அலங்கரிக்கிறது. ஆனால் ஒற்றைத் தலை நாகமான ராகு அம்பாளின் இடுப்பை ஆபரண வடிவில் அலங்கரிக்கிறது. எனவே இக்கோவிலில் கிரகண தோஷங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது.
கிரகணத்தன்று ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தேஸ்வர சுவாமிக்கு அர்ச்சகர்கள் புனித அபிஷேகம் செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் தோஷம் நீங்க ராகு கேது பூஜையும் நடைபெறுகிறது. இந்து மத நம்பிக்கையின்படி, சூரிய கிரகணத்தன்று ஒரு கோவிலில் ஒருவர் சிவபெருமானையும், ஞான பிரசுனாம்பா அம்பாளையும் வழிபட்டால், ஒரு நபர் அவர்களின் ஜாதக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சியால் உண்டாகும் புதிய யோகம்...உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..
இதற்கு ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது கோவிலுக்கு சென்று ராகு கேது பூஜை செய்த பின் சிவபெருமானையும், ஞான பிரசுனாம்பா அம்பாளையும் வழிபடுகின்றனர். சூரிய கிரகணத்தின் போது இந்த கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர்.