ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் செல்வமும், வளமும் நிறைந்து இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். இதுபோன்று செல்வ வளம் மட்டுமின்றி பண வரவும், உடல் ஆரோக்கியம் என அனைத்து பெற்று சிறப்பொடு வாழ்ந்திட லட்சுமி தேவியை வழிபட வேண்டும் என்று கூறிய நம் முன்னோர்கள் அதற்கான வழிமுறைகளையும் கூடியுள்ளனர். அதனை தெரிந்து கொள்வது அவசியம்.
பொதுவாக நமது வீடுகளில் உள்ள சமையலறைகளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று கூட்டப்படுகிறது. அதனால் எப்போதும் நமது சமையலறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் பஞ்சம் என்ற வார்த்தையும் நம்மை அணுகாது.
அதேபோன்று தினமும் காலையில் கண்விழிக்கும் போது நமது உள்ளங்கைகளை நன்கு தேய்த்து கண்களை ஒற்றியபடி கண் விழிக்க வேண்டும்.ஏனென்றால் நமது உள்ளங்கையில் மகாலட்சுமி குடியிருக்கிறாள் என்பது ஐதீகம். மேலும் காலையில் எழுந்ததுமே வாயிற் கதவை திறந்து விடக்கூடாது. முதலில் புறவாசல் கதவை தான் திறக்க வேண்டும். அப்போது தான் வீடுகளில் மூதேவி இருந்தால் அவை வெளியே சென்று விடும். பின்னர் ஸ்ரீதேவி வீடுகளுக்குள் வரும்.
undefined
மகாலட்சுமிக்கு தூய்மை தான் பிடித்தது. அதிலும் மனத்தூய்மை மற்றும் உடல் தூய்மை கொண்ட மனம் மகாலட்சுமிக்கு விருப்பமானது. குறிப்பாக அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திற்குள் நீராடி வீட்டு வாசலில் அகல் விளக்கேற்றி அன்றைய தினத்தை தொடங்க வேண்டும். அப்படி செய்தால் உங்கள் வீடுகளில் மகாலட்சுமி மகிழ்ச்சியாக வசித்து வருவாள். அதே நேரத்தில் வாரம் ஒருமுறையாவது கோயிலிற்கு செல்ல வேண்டும். உங்களுக்கு பிடித்தமான கடவுளை ஒருமுகமாக வணங்க வேண்டும். உங்களால் இயன்றளவில் இயன்றதை தானம் செய்ய வேண்டும்.
இதைத்தவிர சில பூஜை பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்து வருகிறாள். மஞ்சள், சந்தனம், தீபம், எண்ணெய், பால், தயிர், நெய் போன்ற பொருட்களிலும் பசு, யானை போன்ற உயிரினத்திலும் வாசம் செய்து வருகிறாள். அதனால் இந்த பொருட்களை இரவு நேரங்களில் தானம் கொடுப்பதோ அல்லது பெறுவதோ இருக்கக் கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். மேலும் லட்சுமி பாற்கடலில் அமிலம் கடைந்தபோது பல பொருட்கள் வந்த பிறகு தான் வந்துள்ளாள். இதிலும் முக்கியமாக 14 பொருட்களை குறிப்பிடுகிறார்கள். அதில் பாசிப்பயிறு, உளுந்து போன்ற தானியங்களும் அடங்குகிறது. இதன் காரணமாய் தான் கோவில் பிரசாதங்களில் பொங்கலும், வடையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
முன்னர் சொன்னது போல கடலில் இருந்து பெறப்படுவதால் உப்பிலும் வாசம் செய்து வளர்கிறாள் மகாலட்சுமி. அதேபோன்று உப்பு பாத்திரங்களை வெள்ளிக்கிழமை கழுவி வைக்கக் கூடாது. அதே நேரத்தில் வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் நமது வீட்டிற்கு மகாலட்சுமி வருகை தருவாள் என்பதும் ஐதீகம்.
தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு!
குடும்பத்தில் சண்டைகளும், சச்சரவுகளும் வருவது வழக்கம் தான். ஆனால் அந்த மனக்கசப்புக்களை பெரியளவில் மாற்றிவிடக் கூடாது. இதுபோன்ற விவாதங்களும், வீண் சண்டைகளும் உள்ள இடங்களை லட்சுமி ஒருபோதும் விரும்ப மாட்டாள். நாம் அன்றாடம் எப்படி கடவுளை வணங்கி வருகிறோமோ அதேபோன்று பித்ரு தோஷம் தாக்காமல் இருக்க அவர்களுக்கு செய்ய வேண்டிய கடன்களை அந்தந்த நேரத்தில் தர்ப்பணம் செய்து வணங்க வேண்டும்.
நல்ல எண்ணங்கள் மட்டுமே நாம் எப்போதும் சிந்திக்க வேண்டும். அப்போது தான் நம்மை சுற்றியுள்ள தேவைதைகள் நமது எண்ணங்களினால் வெளிப்படும் வார்த்தையை உண்மையாக்கும். அதேநேரத்தில் தினமும் எழுந்து வாசலில் கோலம் போடுவது கூட வழக்கமாக பின்பற்றப்படுகிறது. ஆனால் விஷேச நாட்களில் மட்டுமே வாசலில் கோலம் இட வேண்டும். கடவுள்களுக்கு உரிய ஸ்லோகமும், மந்திரமும் உச்சரிக்கவில்லை என்றாலும் அனைத்து கடவுளுக்கும் பிரியமான ஓம் என்னும் மந்திரத்தை கவனத்துடன் உச்சரித்தாலே போதுமானது.
நற்தேவதைகளும், துர்தேவதைகளும்... வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!
விளக்கு ஏற்றும்போது தலைவிரி கோலத்தில் இருத்தல் கூடாது. பொதுவாக எந்த நேரத்திலும் தலைவிரி கோலத்தில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பது குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுவார்கள்.அதேபோன்று மாலை நேரத்தில் குறிப்பாக 6 மணிக்கு மேல் தலை வாறுதல், பேன் பார்த்தல் போன்ற செயல்களால் வீட்டிலிருக்கும் லட்சுமி வெளியேற்றி, மூதேவியை அழைப்பதற்கு சமம். அதனால் அதை செய்யவே கூடாது.
இவை அனைத்தும் உங்களை வறுத்திக்கொண்டு செய்ய வேண்டிய கடினமான வேலையோ அல்லது உண்ணாவிரதமிருந்து கடுந்தவம் புரியவோ தேவையில்லை. சாதாரணமாக செய்ய வேண்டியது தான். ஆனால் கவனத்துடன் செய்ய வேண்டியது. எதிலும் ஒரு நேர்த்தியும், தூய்மையும் இருந்தால் வீட்டில் லஷ்மி வாசம் செய்வாள். எந்த ஒரு வீட்டில் லஷ்மி வாசம் செய்கிறாளோ அங்கு தரித்திரத்துக்கும் வறுமைக்கும் இடமிருக்காது. அனைவரும் செய்யக்கூடிய எளிய குறிப்புகள் தான் இவை. நாளை முதல் தொடங்குங்கள்.