சிவனின் தலையில் கங்கை இருக்க என்ன காரணம் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Sep 14, 2022, 3:18 PM IST

சிவபெருமானுக்கு பார்வதி தேவி மட்டுமில்லை கங்கா தேவியும் மனைவி தான். அதனால் தான் அவர் கங்கையை தன் தலையில் மறைத்து வைத்திருக்கிறார் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவருக்கு பார்வதி தேவி  மட்டும் தான் மனைவி. அப்படியிருக்க  ஏன் அவர் கங்கையை தனது தலையில் வைத்திருக்கிறார். இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கக்கூடியது தான். இதற்கு பலரும் பல காரணங்கள் தெரிவித்தாலும், அந்த காரணங்கள் எல்லாம் புரியாத புதிராகவே இருக்கும். 
 


தற்போதைய காலத்தில் இருப்பது போல பழங்காலத்தில் கங்கை பூமியில் ஓடுவது கிடையாது. அன்றைய காலத்தில் கங்கை ஆகாயத்தில் மட்டுமே ஓடியது. அதனால் தான் ஆகாய கங்கை என்று பெயர் பெற்றது. அந்த நேரத்தில் பகீரதன் என்ற அரசன் இருந்தான். அவன் தனது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்று முனிவர்களிடம் கேட்டான். அதற்கு முனிவர்கள், உன் முன்னோர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார்.

இதனால் பகீரதன் கங்கா தேவியை நோக்கி கடுமையான தவம் புரிய ஆரம்பித்தான். பகீரதனின் தவத்தை மெச்சிய கங்கை, அவன் முன் காட்சி அளித்தாள். பின்னர் பகீரதனை பார்த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். அவனோ, தாங்கள் வானத்தில் ஓடமால் பூமியில் ஓட வேண்டும் தாயே அப்போது தான் எனது முன்னோர்களின் அஸ்தியை நான் கரைத்து அவர்களின் ஆத்மாவை சாந்தி அடைய செய்ய முடியும் என்று கூறினான்.

Latest Videos

undefined

பகீரதன் கேட்ட வரத்தை கங்கா தேவி ஏற்றுக்கொண்டாலும்.. ஒரு நிபந்தனை ஒன்றையும் கூறினாள். நான் பூமியில் ஓட தயாராகத் தான் இருக்கிறேன். ஆனால் நான் பூமியின் மீது ஓடினால் என்னுடைய வேகம் தாங்காமல் இந்த பூமி வெடித்து சிதறிவிடும். ஆகையால் எனது வலிமையை தாங்கக்கூடிய ஒருவர் என்னை தன் தலையில் வைத்து தாக்கினால் நான் பூமிக்கு வருகிறேன் என தெரிவித்தாள். என்னை தாங்கும் சக்தி சிவபெருமானுக்கே இருக்கிறது. ஆகையால் அவரை நோக்கி நீ தவம் புரிய வேண்டும் என்றாள்.

குங்குமம் தடவிய எலுமிச்சையை தலைவாசலில் வைப்பது ஏன்?

கங்கா தேவி கூறியது படி பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்ய தொடங்கினான். சிவனும் பகீரதன் முன் தோன்றினார். உடனடியாக நடந்தவற்றை அவன் தெரிவிக்க,  பகீரதன் வேண்டிய வரத்தையும் சிவன் அளித்தார். அதன் படி தன் தலைமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் தலைமுடியில் இறங்கி பின் பூமியை அடைந்த போது கங்கையின் வேகம் குறைந்தது. இதனாலேயே கங்கையை சிவன் தன் தலையில் வைத்திருக்கிறார்.

click me!