தனத்ரயோதசி மற்றும் தன்வந்திரி த்ரயோதசி என்றும் அழைக்கப்படும் இந்த பண்டிகை தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளாகும்.
இந்தியாவின் பல மாநிலங்கள் குறிப்பாக வட மாநிலங்களில் தீபாவளி 5 நாள் பண்டியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி இன்னும் சில நாட்களில் தண்டேராஸ் உடன் தொடங்க உள்ளது. தனத்ரயோதசி மற்றும் தன்வந்திரி த்ரயோதசி என்றும் அழைக்கப்படும் இந்த பண்டிகை தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளாகும்.மேலும் இது தங்கம் மற்றும் வெள்ளி, புதிய பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது. இது ஹிந்தி கார்த்திகையில் த்ரயோதசி அல்லது கிருஷ்ண பக்ஷத்தின் 13 வது சந்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த தனத்திரியோதசி நாளில் செல்வத்தின் கடவுளான குபேரனுடன் லட்சுமி தேவியை வழிபடுகின்றனர்.
ஆயுர்வேதக் கடவுளின் பிறந்தநாளான தன்வந்திரி ஜெயந்தி என்றும் தன்தேராஸ் அனுசரிக்கப்படுகிறது. விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி, ஒரு கையில் அமிர்தம் (அழியாத அமிர்தம்) மற்றும் மறு கையில் ஆயுர்வேதம் நிறைந்த பானையுடன் போது பிறந்தார் என்று நம்பப்படுகிறது; அவர் ஆரோக்கியம், குணப்படுத்துதல் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் இந்து கடவுளாகக் கருதப்படுகிறார், மேலும் ஆயுர்வேதத்தின் அறிவை உலகிற்கு பரப்பும் பணியில் ஈடுபட்டார். எனவே இந்த தனத்திரியாதசி தேசிய ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தனத்திரியோதசி 2023 தேதி
இந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தனத்திரியோதசி அனுசரிக்கப்படும், அதைத் தொடர்ந்து நரக் சதுர்தசி அல்லது சோட்டி தீபாவளி (நவம்பர் 11), தீபாவளி மற்றும் லக்ஷ்மி பூஜை (நவம்பர் 12), கோவர்தன் பூஜை (நவம்பர் 13), மற்றும் பையா தூஜ் (நவம்பர் 14) ஆகிய பண்டிகைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தனத்திரியோதசி நேரம் சுப முஹூர்த்தம் :
தனத்திரியோதசி பூஜைக்கான சுப முஹுர்த்தம் இந்த ஆண்டு மாலை 5:47 முதல் 7:43 வரை இருக்கும். லக்ஷ்மி, விநாயகர், தன்வந்திரி மற்றும் குபேரர் ஆகியோரை வணங்கி, பூக்கள், மாலைகள் மற்றும் ஏதேனும் இனிப்பு வகையை பிரசாதமாக வைத்து வழங்கலாம். பூஜையின் போது, லக்ஷ்மி தேவியின் மூன்று வடிவங்களான, மகாலட்சுமி, மகா காளி மற்றும் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.
தனத்திரியோதசி
தனத்தியோதசி பூஜை முகூர்த்தம்: மாலை 5:47 முதல் 7:43 வரை
காலம்: 1 மணி 56 நிமிடங்கள்
நவம்பர் 10, 2023 வெள்ளிக்கிழமை அன்று எம தீபம்
பிரதோஷ காலம்: மாலை 5:30 முதல் இரவு 8:08 வரை
விருஷப காலம்: மாலை 5:47 முதல் 7:43 வரை
திரயோதசி திதி ஆரம்பம் - நவம்பர் 10, 2023 அன்று மதியம் 12:35
திரயோதசி திதி முடிவு - நவம்பர் 11, 2023 அன்று மதியம் 1:57
தனத்திரியோதசி கதை
பாற்கடலை கடையும் போது, செல்வத்தின் கடவுளான குபேரனுடன் லட்சுமி தேவி கடலில் இருந்து வெளிப்பட்டதாக நம்பப்படுகிறது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கடைசியாக வெளிப்பட்டவர் தன்வந்திரி. எனவே இந்த புனித நாளில், குபேரனுடன் லட்சுமி தேவியையும் மக்கள் வழிபடுகின்றனர்.. இதனால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
சோட்டி தீபாவளி 2023 எப்போது? அதன் புராண முக்கியத்துவம் என்ன? எப்படி வழிபட வேண்டும்?
தனத்திரியோதசி நாளில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்?
இந்த தனத்திரியோதசி நாளில் லட்சுமி தேவி, தன்வந்திரியுடன் வீட்டிற்கு வருகை தருவதாகவும் அவர்களை வழிபட்டல் வீட்டில் பணவரவு, வருமான, வணிக வாய்ப்புகள் மற்றும் வெற்றியை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் மங்களகரமானவை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தருவதாக கருதப்படுகிறது. எனவே தனதிரியோதசி நாளில் பலர் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குகின்றனர். மேலும், பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்களை வாங்குகிறார்கள். லட்சுமி மற்றும் விநாயகர் சிலைகளை வாங்குவதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.