“தாம்பரத்தில் ஒரு கைலாயம்” இல்லத்தரசியின் தெய்வீக முயற்சி

Published : Sep 27, 2022, 01:06 PM IST
“தாம்பரத்தில் ஒரு கைலாயம்” இல்லத்தரசியின் தெய்வீக முயற்சி

சுருக்கம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு இல்லத்தரசிகள் தங்கள் வீடுகளில் கொலுவைத்து வழிபடும் நிலையில் தாம்பரம் அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் கைலாயம் போன்ற வடிவமைப்பில் கொலு அமைத்து வழிபட்டு வருகிறார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியுள்ளது. தொடர்ந்து பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள். முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 

நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த திருவிழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர், சுதர்சன்நகரை சேர்ந்த சித்திதேவி என்பவர் வருடாவருடம் அவரது வீட்டில் கொலு வைப்பது வழக்கம் அதேபோல் இந்த வருடம் ஒரு படி மேலே போய்  அவர் வீட்டையே கைலாயமாக மாற்றி இருகின்றார். ஆம் அவர் வீட்டின் இரண்டாவது தளத்தில் 1500 சதுர அடியில் பிரமாண்டமான கொலு அமைத்துள்ளார்.

Watch : திருச்சி ஶ்ரீரங்கத்தில் நவராத்திரி கொலு : யானைகள் நடனம்! 

அந்த கொலுவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இறைவன், இறைவியின் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த கொலுவில் ஐநூறுக்கும் மேற்பட்ட அம்மன் சிலைகள் இடம்பெற்றிருந்தன. மேலும் கைலாயம் போன்ற ஒரு செட் அமைத்து இளம் நீல வண்ணத்தில் வண்ணவிளக்குகளை ஒளிரவிட்டு அதன் நடுவே சிவன் சிலை மற்றும் அதன் முன் பனி லிங்கம் மிளிர்வதுபோன்ற தத்ரூபமாக கைலாயம் போன்று இந்த வருடம் அமைத்துள்ளார் இதனை அக்கம்பக்கத்தினர் கைலாயத்தில் இருப்பது போன்ற உணர்வதாக கூறிசெல்கின்றனர். 

மேலும் இந்த கொலுவில் கைலாயசிவன், அர்தனானிஷ்வரார், ராவணன்தர்பார், பாலமுருகன்கார் திகைபெண்கள், கிருஷ்ணலீலை, கிருஷ்ணவரலாறு, மீனாக்‌ஷி கல்யாணம், விஷ்வரூப பெருமாள், அஷ்டலக்‌ஷ்மி, அண்ணாமலை, உண்ணாமலை அம்மையார், காமதேணு, லக்‌ஷ்மி நரசிம்மர், சப்தரீஷிகளை கையில் ஏந்திய அமிர்ததேவி உள்ளிட்ட ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விதவிதமான சுவாமி பொம்மைகளை தேடி பிடித்து காட்சி படுத்தி அசத்தி இருகின்றார் சித்திதேவி. 

யாருக்கு சர்ப்ப தோஷம் தாக்கும்.. அதற்கான பரிகாரங்கள் என்ன?

மேலும் வீட்டிற்க்கு வரும் அனைத்து பெண்களையும் கால்களில் திலகம் இட்டு, தாம்பூலம் அளித்து வரும் சித்திதேவி அனைத்து பெண்களும் அம்மன் வடிவமாக பார்க்க வேண்டு என்பதை உணர்த்தும் நிகழ்வே இந்த நவராத்திரி முன்னிட்டு 10 நாட்கள் வைக்கபடும் கொலுவின் உண்மை என தெரிவித்தார். 

மேலும் சிறு வெள்ளி பொருட்களில் சுவாமி பொம்மைகள்,தீவாரதனை தட்டுகள்,பஞ்சபாத்திரம் என இரண்டு படிகளில் முழுவதும் வெள்ளி பொடுட்கள் வைத்தும் அசத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவியலால் விளக்க முடியாத அதிசயம்! எருமைவெட்டிபாளையத்தில் ஆடும் சிவனின் தீப சுடர்!
பாதி உடல்... முழுமையான காதல்: அர்த்தநாரீஸ்வரர் சொல்லும் இல்லறப் பாடம்