எங்கே நிம்மதி.. அரசனுக்கு புரிய வைத்த பிச்சைக்காரன்!

By Dinesh TG  |  First Published Sep 26, 2022, 7:33 PM IST

ஒன்றை இழந்து தான்  ஒன்றை பெற முடியும் . இதை உணர்ந்துவிட்டால் மனிதர்கள் நிம்மதியை எங்கும் தேடி செல்ல வேண்டியதில்லை.  அதை உணர்த்தும் கதை ஒன்றை பார்க்கலாம். 
 


இயற்கை வளம் சூழ்ந்த இரத்தின கிரி என்னும் மலையை ஆண்டு வந்தான் ரூபேந்திர ராஜா என்னும் அரசன். அவனுடைய ஆட்சியில் மக்கள் எல்லா வளமும் பெற்று இன்பமாக வாழ்ந்து வந்தார்கள். மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல்  வாழ்ந்துவந்தார்கள். ஆனால் அரசனுக்கு மட்டும் ஏதோ ஒன்று குறையிருந்தாற் போன்று இருந்தது.  மனதில் ஏதோ ஒரு பாரமோ அழுத்தமோ இருந்தது. 

எல்லாம் இருந்தும் எனக்கு ஏன் நிம்மதி என்பது மட்டும் இல்லை என்ற எண்ணம் அரசனுக்குள் முழுமையாய் பரவி இருந்தது.  அரண்மனையில் இருப்பவர் அனைவரிடமும் நிம்மதி பற்றி கேட்டு அவன் நிம்மதியில்லாமல் தவித்ததுதான் மிச்சம் ஆயிற்று. காலங்கள் கடந்தது. அரசனுக்கு விடை மட்டும் தெரியவில்லை.

Latest Videos

undefined

இந்நிலையில்  ஒருநாள் அரசன் மாளிகையில் நின்று கொண்டிருந்த போது பிச்சைக்காரன் ஒருவன் மகிழ்ச்சியோடு ஆடியபடி துள்ளிதிரிந்து சிரித்தபடி அரண்மனையை கடந்தான். கிழிசலான உடையும், ஒட்டை பாத்திரமும் அழுக்கு மூட்டையும் சுமந்து சென்றவனுக்கு என்ன அவ்வளவு ஆனந்தம் என்று யோசித்த அரசன் காவலர்களை அழைத்து அந்த பிச்சைக்காரனை அழைத்து வர சொன்னான். 

காவலாளிகள் அந்தப் பி ச்சைக்காரனைச் சந்தி த்து எங்கள் மன்னர் உன்னை அரண்மனைக்கு வர சொல்கிறா ர் வா எங்களோடு என்றார்கள். ” பிச்சைக்காரன் அமைதியாக என்னால் வர முடியாது. தேவை என்றால் உங்கள் அரசன் வந்து என்னை  வந்து பார்க்கட்டும்” என்றான். சரி  நீ இங்கேயே இரு என்று சொல்லி அவனை அங்கேயே அமர வைத்தார்கள். பிறகு  செய்வதறியாமல் திகைத்த காவலாளிகள் அரசனிடம் சென்று தெரிவித்தார்கள். 

பிச்சைக்காரன் என்னை சந்திக்க மறுப்பதா என்ற குழப்பத்தோடு அரசனே அவனை சந்திக்க  சென்றான். அப்போது   அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற நிச்சயம் இல்லாத நிலையில் எப்படி நீ இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய் என்று கேட்டார். 

பிச்சைக்காரன் சிரித்தான் . பிறகு  நீங்கள் தானே அரசன். ஏராளமான பொன், ஆபரணங்கள் வைத்திருக்கும் செல்வந்தன் அல்லவா.  அந்த மாளிகை கூட உங்களுடையது தானே என்றான். 
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக இருந்தது. ஆனாலும் உன்னை போல் நான் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். 
 பிச்சைக்காரன் சில நிமிடம் யோசித்தான். உடனே  நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் இப்போதே என்னுடன் வர வேண்டும்.  நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடை தவிர வேறு எதுவும் இருக்க கூடாது என்றான். 

மகாளய அமாவாசை 2022 அமாவாசை விரதம் பெண்கள் இருக்கலாமா ? தவிர்க்க வேண்டியவர்கள் யார்?

அரசன் மறுத்தான். என்னை நம்பி  நாடு உள்ளது, மக்கள் இருக்கிறார்கள் எதிரிகள் எப்போது வேண்டுமானாலும் படை எடுத்து வருவார்கள். அவர்களை பாதுகாப்பாக வைக்கும் பொறுப்பு எனக்கு உண்டே என்றான்.  மீண்டும் சத்தமாக சிரித்த பிச்சைக்காரன்  உங்களுக்கு இரண்டு சாய்ஸ் தான். ஒன்று எதுவுமே வேண்டாம் என்று என்னுடன் வாருங்கள். அல்லது நீங்கள் இந்த மாளிகையில் நிம்மதியில்லாமல் எப்போதும் போல் பொறுப்பாக இருங்கள் என்றான். மேலும்  என்னை பார்த்தீர்களா என்னிடம் எதுவும் இல்லை. யாரும் என்னை அடித்து பிடுங்கவும் ஒன்றும் இல்லை. அதனால் நிம்மதியாக இருக்கிறேன். என்னிடமும் ஒன்றும் இல்லை. இழக்கவும் எதுவும் இல்லை. இந்த நிமிடம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அவ்வளவே.  நீங்கள் ஒன்றை பெற மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும். சுகபோக வாழ்க்கை வேண்டுமென்றால் அதை காப்பாற்றவும் நீங்கள் முயற்சித்து தான் ஆகவேண்டும். நீங்கள் ஒன்றை பற்றியிருக்கும் வரை உங்களுக்கு நிம்மதி என்பது வரவே வராது என்றான். 

Kantha Sasti Kavasam : கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

அரசனுக்கு புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. பிறகு கழுத்தில்  இருந்த மாலை ஒன்றை கழற்றி கொடுத்தார். ஆனால் அலறிய பிச்சைக்காரன்  இதை பாதுகாக்க நான் முயற்சிக்க வேண்டும் என்று மறுத்த பிச்சைக்காரன் உல்லாசமாய் சென்றான். நிம்மதி என்பது இன்னும் சில காலத்துக்கு எட்டாக்கனி தான் என்று பெருமூச்சு விட்டபடி அரசர் அரண்மனைக்கு திரும்பினார்.  

ஆசை இல்லாத மகிழ்ச்சி தான் எப்போதும் நிலைத் நிற் கும் என்பதை உணர்ந்துகொ ண்டால் நிம்மதியைத் தேடி அலைய வேண்டியதில்லை .

click me!