முருகப்பெருமானின் சிலையை பெண் வடிவில் கண்டிருக்கிறீர்களா?

By Dinesh TGFirst Published Sep 26, 2022, 3:32 PM IST
Highlights

முருகப் பெருமானை நாம் பல வடிவங்களில் பார்த்திருப்போம். ஆனால் லிங்க வடிவிலும் பெண் வடிவிலும் காட்சி தந்து தன் பக்தர்களை அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வில்வாரணி என்னும் ஊரில் உள்ளது அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில். கிட்டதட்ட 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் முருகன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவனும் முருகனும் வேறு வேறு கிடையாது என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அவர் இங்கு காட்சி தருகிறார். 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பகுதியில் வாழ்ந்த குருக்கள் இருவர் வருடா வருடம் ஆடி கிருத்திகை அன்று திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். 

ஆனால் அந்த இருவராலும் ஒரு வருடம் சில காரணங்களால் திருத்தணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் மனமுடைந்து போனார்கள். அன்றிரவு அவர்கள் இருவரின் கனவிலும் வந்த முருகன், தான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளி இருப்பதாகவும், அங்கு கோவில் அமைத்து கிருத்திகை நட்சத்திரத்தன்று வழிபாடு செய்யும்படியும் கூறிவிட்டு மறைந்திருக்கிறார்.

விரதம் என்றால் எதுவும் சாப்பிடகூடாதா?

விடிந்த பிறகு தாங்கள் இருவருக்கும் வந்த கனவை பற்றி அவர்கள் கலந்து பேசிய பிறகு, முருகன் குறிப்பிட்டபடி அருகில் உள்ள மலைக்கு சென்று சுயம்பு வடிவான முருகனை தேடிய போது அங்கே ஒரு நாகம் சுயம்பு வடிவான லிங்கத்தை பாதுகாத்துக் கொண்டிருந்தது. 

குருக்களை கண்டதும் அந்த நாகம் படம் எடுத்து ஆடி லிங்கத்திற்கு குடை பிடிப்பது போல காட்சி அளித்தது. அந்த லிங்கம் தான் கனவில் முருகன் குறிப்பிட்ட சுயம்பு வடிவம் என்பதை உணர்ந்த குருக்கள் இருவரும் அங்கே சிறியதாக ஒரு குடிசை அமைத்து வழிபாடு நடத்த ஆரம்பித்தனர். காலப்போக்கில் வள்ளி தெய்வானையோடு முருகனின் சிலை வைக்கப்பட்டது.

இறைவனிடம் சந்தோஷத்தை கேட்டால் சங்கடமில்லாமல் கிடைக்குமா?

இதையடுத்து பெண் வடிவிலான முருகன் சிலை..

கோயமுத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ளது சீரவை. இங்கு முருகப்பெருமான் தன் கையில் திருத்தண்டை வைத்துக் கொண்டு தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். திருவிழா காலங்களில் இங்கு முருகனுக்கு வேடுவ அலங்காரம், ராஜ அலங்காரத்தோடு பெண் வடிவிலும் அலங்காரம் செய்யப்படுகிறது. காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் அழகிய பெண் வடிவில் உள்ள முருகனை தரிசிப்பதன் பயனாக திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும் என்றும் மேலும் பல அறிய பலன்களை பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.

click me!