அரச மரத்தை சுத்தினா தோஷம் போகுமா ?

By Dinesh TGFirst Published Sep 26, 2022, 2:52 PM IST
Highlights

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம். அரசமர பிரதக்ஷிணம் செய்தால் புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
 

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகைமரங்களுள் அரசமரம் முதன்மையானது. மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது, அரச மரமாகும். இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை வர்ணிப்பார்கள். அதிலும் அரச மரத்தின் தெற்கு பக்க கிளைகளில் ஆலகால விஷத்தைக் குடித்த சிவ பெருமானும், மேற்கில் காக்கும் கடவுள் நாராயணனும், கிழக்கில் தேவர்களும் இருப்பதாகத் தெரிவிக்கின்றது.

பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரசமரக்காற்றை நாம் சுவாசித்தால் ஆயுளும் வளரும். ஆரோக்கியம் சீராகும். அரசமர இலைகளின் சலசலப்பு ஆலய மணிபோல இருக்கும். அரசமரத்தடியில் விநாயகப் பெருமானையும், நாகராஜனையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத்தடைகள் அகலும். கனிவான வாழ்க்கை அமையும்.

அயோத்தியின் மன்னனாக இருந்த தசரதன், சனீஸ்வரர் மீது பாடி சனி ஸ்தோத்திரத்தைப் படித்து, அரச மரத்தை சுற்றினால் சனி தோஷங்கள் நீங்கும்.
குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆண்கள் கூட அரச மரத்தை சுற்றலாம்.
அரச மரத்தைப் பகலில் மட்டும் தான் சுற்று வேண்டும். இரவில் சுற்றக் கூடாது. அரச மரத்தை திங்கள் கிழமை, சனிக்கிழமைகளில் சுற்றி வழிபடுதல் மிகவும் நல்லது.

சிவன் சுடுகாட்டில் ஆடுகிறார்' என்பதற்கு பின் இருக்கும் உண்மை

அரச மரத்தை காலை 10 மணிக்குள் சுற்றுவதன் மூலம், அதன் மீது விழும் சூரிய கதிர்கள் மூலம் மிகச் சிறப்பான சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் இந்த காற்றில் பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்தக் கூடிய சக்தி உள்ளடக்கியுள்ளது. அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் மரங்களில் முக்கியமானதாக இந்த அரச மரம் உள்ளது.  அரச மரத்தை சுற்றினால் கருத் தரிக்கும் என்று சொல்ல காரணமும் இதுதான். 

மொட்டை அடிப்பது ஆன்மிகமா ...அறிவியலா ?

புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். 

இந்த காலத்தில் எதற்கெடுத்தாலும் காரணம் சொல்லும் நாம், சரியான ஆன்மிக, அறிவியல் காரணங்களை அறிந்து, நம் முன்னோர்கள் சொன்ன நல்ல விஷயங்களை கடைப்பிடித்து வாழ்வில் நற்பலன்களை அடைவது நல்லது.

click me!