நாளை மாவளய அமாவாசை. அமாவாசையில் முன்னொர் வழிபாடு என்பது மிக முக்கியமானது என்கிறது சாஸ்திரம்.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் மிக முக்கியமாக சொல்லகூடியது தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளிலும் தவிர்க்காமல் நாம் செய்யும் பித்ரு வழிபாடானது அவர்களது ஆசிர்வாதத்தை நிறைவாக அளிக்கும். அப்படி சிறப்புமிக்க அமாவாசை தான் மகாளயபட்ச அமாவாசை என்னும் புரட்டாசி அமாவாசை.
இந்த அமாவாசை என்பது ஆவணி மாத பெளர்ணமிக்கு அடுத்து பிரதமையில் தொடங்கி அமாவாசை வரை உள்ள நாட்களே. மகாளய பட்ச காலத்தில் நிறைவு நாளே மகாளயபட்ச அமாவாசை. இதில் மகாளயம் பட்சை என்பதின் அர்த்தம் பட்சம் என்றால் பதினைந்து ஆகும். மகாளயம் என்பது பித்ருக்களை குறிக்கும். அதனால் தான் இந்த புரட்டாசி அமாவாசை மகாளயபட்ச அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
undefined
இந்த காலத்தில் நமது முன்னோர்கள் அவர்களது பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு வருகிறார்கள். நாம் இந்த நாளில் அவர்களை வணங்கும் போது நமது வழிபாடுகளை கண்டு மகிழ்கிறார்கள். நம்மை ஆசிர்வதிக்கிறார்கள். இத்தகைய நாளில் நீங்கள் உங்கள் முன்னோர்கள வணங்கினால் அரிய பேறும் கிட்டும்.
மகாளய அமாவாசை 2022 அமாவாசை விரதம் பெண்கள் இருக்கலாமா ? தவிர்க்க வேண்டியவர்கள் யார்?
நம் முன்னோர்களை நீங்கள் மறந்திருந்தாலும் இந்த நாளில் வழிபட்டு அவர்களது பூரண ஆசியை பெறலாம். இதுவரை நீங்கள் உங்கள் முன்னோர்களை வழிபாடு செய்யவில்லை என்றாலும் இந்த அமாவசையில் மறக்காமல் வழிபட்டால் அவர்களுடைய ஆசி உங்களுக்கு கிட்டும்.
முன்னோர்களை வழிபட வேண்டும். அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களது பெயர்களை சொல்லி மூன்று முறை எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விடவேண்டும். முன்னோர்களின் படங்களை மலர்களால் அலங்கரித்து அவர்களுக்கு படையலிட்டு அதை காகத்துக்கு வைத்து வேண்டி கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து நம் வழிபாடை ஏற்று நம்மை ஆசிர்வதித்ததாக கொள்ளலாம்.
Mahalaya Amavasya : மஹாளய பட்ச வழிபாடு எந்த நாளில் என்ன பலன்?
இந்த மகாளய பட்ச நாளில் முன்னோர்களை நினைத்து தானம் செய்யலாம். அவர்கள் நினைவாக வஸ்திர தானம் செய்யலாம். குடை வழங்கலாம். போர்வை, காலணி, சால்வை போன்றவை அளிக்கலாம் இயன்றால் முடிந்தளவு 10 பேருக்கு அன்னதானம் செய்யலாம். சற்று வசதி படைத்தவர்கள் கோ தானம் செய்யலாம். மற்ற அமாவாசை நாளில் தானம் கொடுக்க முடியாத சூழல் இருந்தாலும் இந்த பெரிய அமாவாசையில் தானம் கொடுங்கள்.
இதன் மூலம் முன்னோர்களின் சாபத்தை பெற்றிருந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும். உங்களுக்கு பித்ரு தோஷம் இருந்தால் நீங்கள் அதிலிருந்து விலக முடியும். இதனால் குடும்பத்தில் மங்கலகரமான காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். மறந்தவனுக்கு மாகாளயம் என்பார்கள். உங்கள் முன்னோர்களை நீங்கள் மறந்திருந்தால் இந்நாளில் தர்ப்பணம் கொடுத்து அவர்களது ஆசியை வேண்டுங்கள்.
நாளை மகாளய அமாவாசை பித்ருக்களை வணங்கி அவர்களுடைய ஆசியை பரிபூரணமாக பெறுங்கள்