கோவிலில் அர்ச்சனை செய்யும் போது நம் பெயரில் செய்ய வேண்டுமா? இறைவன் பெயரில் செய்யவேண்டுமா?

By Dinesh TG  |  First Published Sep 24, 2022, 1:38 PM IST

கோவில்களுக்கு செல்லும் போது அர்ச்சனை செய்வது வழக்கம்.  அப்படி செய்தால் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 
 


அர்ச்சனை செய்யும் போது நம்முடைய வேண்டுதலை சொல்ல சொல்ல நினைத்தது நடக்கும் என்று சொல்வார்கள்.  அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டாலே யார் பெயருக்கு அர்ச்சனை செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கோவிலில் அர்ச்சனை செய்திடும் போது நம்முடைய பெயரைக் கேட்பதால் நமக்கு அர்ச்சனை செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. நமது பெயர் கேட்பினும் அர்ச்சனை என்பது  கடவுளுக்கு தான் செய்கிறார்கள். நம்முடைய பெயர், குலம், கோத்திரத்தை கேட்கும் கோவில் குருக்கள், இந்த குலத்தைச் சேர்ந்த, இந்த நபர் அர்ச்சனை செய்கிறார் என்று தான் சொல்கிறார்கள். இறைவன் தனக்குத்தானே அர்ச்சனை செய்து கொள்வார் என்பதில் பயன் இல்லை. இதைப் புரிந்துகொண்டால் யார் பெயருக்கு அர்ச்சனை என்பதில் குழப்பம் வராது.

Tap to resize

Latest Videos

கடவுளுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள் அதிக முக்கியத்துவம் பெற்றது அர்ச்சனை தான். இந்த  அர்ச்சனை என்னும் வார்த்தை சமஸ்கிருத சொல்லான 'அர்ச்சா' என்ற வார்த்தையில் இருந்தே தோன்றியதாக கூறப்படுகிறது. அர்ச்சா என்ற வார்த்தையின் உண்மையான பொருள் சிலை என்பதே. சிலையின் முன்பு நாம் மந்திரங்களை ஓதுவதால் அது அர்ச்சனை என்றாகிவிட்டது.

பொதுவாக கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்வர். இன்னும் சிலர் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் கடவுளின் பெயரில் எப்போது அர்ச்சனை செய்ய வேண்டும். நம் பெயரில் எப்போது அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது குறித்து பலர் அறிந்திருப்பதில்லை.

தேங்காய் அழுகினால் அபசகுணமா.. கெட்டது நடக்கும் அறிகுறியா?

கடவுளை மகிழ்விக்க மந்திரங்களை ஓதி அந்த சமயத்தில் நாம் அவரை மனதில் நிலை நிறுத்தி நம்முடைய குறைகளை அவரிடம் கூறுவதும், அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதும் தானே அர்ச்சனை செய்வதன் தாத்பரியம். நாம் சில வேண்டுதல்களோடு கோயிலிற்கு செல்லும் சமயங்களில் நமது பெயரில் அர்ச்சனை செய்து அவரிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது தான் முறை. ஆனால் நமது வேண்டுதல்கள் நிறைவேறிய சமயத்தில் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்து அவருக்கு நன்றி தெரிவிப்பதே சிறந்தது.

கணபதிக்கு ஏன் அருகம்புல்லை வைக்கின்றோம்?

கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. இறைவன் தேவைகள் அற்றவன். எனவே, அவனுடைய பெயரில் அர்ச்சனை செய்வதால் எந்த பலனும் இல்லை. நம்முடைய பெயரில் செய்வதுதான் சரியானது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். நம்முடைய பெயரில் செய்தாலும், கடவுளின் பெயரில் செய்தாலும் எல்லாம் சென்று சேருவது ஒரே ஒரு இடத்துக்குத்தான் அதனால் நம்முடைய பெயர் அல்லது கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்தாலும் கிடைக்கும் பலன் ஒன்றே.

அதுமட்டுமின்றி நம்முடைய பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்துவிட்டு, சாமி பெயருக்கு அர்ச்சனை செய்கிறோமோ இது சரியானதுதானா என்ற குழப்பமும் எல்லோர் மனதிலும் எழத்தான் செய்கிறது.

நமக்கு என்ன தேவை, எப்போது எதைக் கொடுக்க வேண்டும் என்று அனைத்தும் அறிந்தவனாக இறைவன் இருக்கிறான். நம்முடைய விண்ணப்பங்களை சொல்லி நிறைவேற்றக் கோரி செய்வதே அர்ச்சனை. இறைவன் நமக்கு செய்த நன்றிக்காக, நம்முடைய தேவைக்காக என பல நோக்கங்களுக்காக அர்ச்சனை செய்யப்படுகிறது.

click me!