நாம் எத்தனையோ காணிக்கைகளை இறைவனுக்காக செலுத்துகிறோம். அத்தனை காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவது தான். ஆனால் இந்த முடி காணிக்கை செலுத்துவதற்கு பின்னால் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
தலையை மொட்டை அடித்து கொள்வது என்பது பல இந்துக்கள் பின்பற்றி வரும் ஒரு முக்கியமான சடங்காக உள்ளது. தலைமுடி என்பது பெருமையான ஒரு விஷயமாகும். அதனை கடவுளுக்கு காணிக்கையாக அளிப்பதன் மூலமாக, நம் செருக்கும், ஆணவமும் நம்மை விட்டு நீங்கும் என நம்பப்படுகிறது. பிறந்த குழந்தை வளர வளர குலதெய்வ கோவிலில் மொட்டை போடுவது வழக்கம். அதன் பிறகும் இரண்டு முறை மொட்டு போடுவது வழக்கம். அதன் பிறகும் வளர்ந்த பிறகு இறைவனை வேண்டி முடி காணிக்கை செலுத்துவது உண்டு. இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் தெரியுமா..
பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது கழிவுகளில் உழன்றிருக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதில் இருந்து பிள்ளைகளைக் காக்கவே குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் முடியின் வேர்க்கால்களின் வழியாகக் கழிவுகள் வெளியேறிவிடும். இதனால் தான் குழந்தை பிறந்த சில மாதங்களில் குலதெய்வ கோயில்களில் முடி காணிக்கை செலுத்துமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு மொட்டை போடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை காப்பதற்காக தான்.
அதேபோன்று பிறப்பு மற்றும் மறுபிறவி மீது இந்துக்களுக்கு நம்பிக்கை உண்டு. கடந்த ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பை துண்டிப்பதற்காகவே குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடப்படுகிறது. அப்படி தலையை மொட்டை அடிப்பதால் அக்குழந்தை இந்த பிறப்பில் புதிய வாழ்க்கையை தொடங்குகிறது. அதனால் இது ஒரு முக்கியமான சடங்காக பார்க்கப்படுகிறது.
கருப்பு கயிறு கட்டுவதில் இருக்கும் அறிவியல் உண்மை!!
தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தை குறிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் தலைமுடியை மொட்டை அடித்து கொள்வதன் மூலம், நாம் கடவுளிடம் சரணாகதி அடைகிறோம். தலைமுடியை மொட்டை அடிப்பதன் மூலம் நம் தலைக்கனத்தை இழந்து, கடவுளுக்கு அருகில் வருகிறோம். இது பணிவை எடுத்துக்காட்டும் ஒரு செயலாகும். மேலும் எந்த ஒரு ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல் கடவுளை உணர ஒரு சின்ன முயற்சியாகும்.
அதனால் இந்து மதத்தில் மொட்டை அடிப்பது என்பது மிகவும் முக்கியமான சடங்காகும். இது பணிவை எடுத்துக்காட்டும் செயல். உங்களை ஒட்டு மொத்தமாக கடவுளுக்கு அற்பணிக்கும் ஒரு முயற்சி.