மகாளய பட்ச அமாவாசை வருடத்தில் வரக்கூடிய அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை, புரட்டாசி மாத அமாவாசை அதாவது மாவளய அமாவாசை மூன்றும் சிறப்பானது. அதிலும் சிறப்பானது இந்த மகாளய அமாவாசை. நாளை வரவிருக்கும் மிக மிக சிறப்புக்குரிய மகாளாய அமாவாசை அன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பார்க்கலாம்.
அமாவாசை தர்ப்பணம்
அமாவாசை நாளன்று நமது முன்னோர்களை மனதில் நினைத்து ஆற்றிலோ புனித நதி நீர் இடங்களிலோ எள்ளு, தண்ணீரும் தர்ப்பணம் செய்வது வழக்கம். அப்படி செய்தால் நமது முன்னோர்களின் பசியும் தாகமும் அடங்கும் என்று இந்து மதங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மகாளய அமாவாசை பித்ருக்கள் நேரடியாக வந்து வழிபாட்டு முறையை பார்ப்பதால் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. நாளை மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் முறை குறித்து பார்க்கலாம்.
undefined
தர்ப்பணம் செய்வது எப்படி
உங்கள் முன்னோரை நினைத்து கடற்கரையிலோ புனித நீர் இருக்கும் நீர்நிலைகளிலோ சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்கள் முழுமையாக பசியாறி விடுவார்கள். உங்களுக்கு நீர் நிலைகள் செல்வதற்கு வசதிப்படவில்லை என்றால் நீங்கள் இதை செய்யலாம்.
சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்று வலது கையில் எள் எடுத்து தூய பாத்திரத்தில் நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும். இதை கொண்டு சென்று நீர் நிலைகள் இருக்கும் இடங்களில் குளங்களில் விடலாம். பித்ருக்களுக்கு பசியும் தாகமும் இருக்கு. அதை தீர்க்கவே இந்த தர்ப்பணம் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினத்தில் அகத்திக்கீரையை பசுவுக்கு கொடுப்பதும் ஐதிகம்.
இந்த தர்ப்பணத்தை முழு மனதோடு கவனமாக செய்ய வேண்டும். இன்றைய நாளில் உங்களால் இயன்ற அளவுக்கு தானம் கொடுக்கலாம். இது பித்ருக்களை மேலும் திருப்தி படுத்துகிறது. இதனால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உடல் வலிமை செல்வம் போன்றவை தடையில்லாமல் பெறலாம்.
இத்தகைய வழிபாட்டு முறையின் போது விரதம் கடைப்பிடிப்பது உண்டு. இந்த விரதத்தை அனைவரும் கடைப்பிடிக்கலாமா என்பதை தெரிந்துகொள்வோம். பொதுவாக அமாவாசை விரதம் தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கணவரை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படியெனில் தாயை அல்லது தந்தையை இழந்த பெண்கள் என்ன செய்வது என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
அமாவாசை விரதம் பெண்கள்
திருமணமான பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்க கூடாது. குறிப்பாக அவர் கணவர் இருந்தால் கண்டிப்பாக விரதம் கூடாது.
அந்த பெண்ணுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இருந்தால் அவர்கள் தான் அமாவாசை விரதம் இருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அப்பெண்ணுக்கு சகோதரர்கள் யாரும் இல்லாத நிலையில் தாய் மட்டும் இருந்தால் அவர் விரதம் இருக்கலாம். தர்ப்பணம் கொடுக்கலாம். அதே போன்று அப்பா இருந்து அம்மா இல்லாத நிலையில் அவர் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
அவ்வையும் முருகனும் நமக்கு கற்றுத்தந்தது இதுதான்!
அப்பெண்ணுக்கு யாரும் இல்லாத நிலையில் பெற்றோர்கள் இருவரும் இல்லை. உடன் பிறந்தவர்களும் இல்லை என்றால் அப்பெண் விரதம் இருக்க கூடாது. ஆனால் கோயிலுக்கு சென்று தானம் செய்யலாம். அன்றைய தினம் அன்னதானம் செய்யலாம்.
முன்னோர்களின் படங்களுக்கு மாலையிட்டு அவர்களுக்கு பிடித்த உணவை படையலிட்டு வழிபாடு செய்யலாம். அவ்வளவே. என் பெற்றோர்கள் எனக்கு உயிரானவர்கள் என்று விரதம் இருப்பது பிரயோஜனமில்லை. அதிலும் கணவர்கள் உயிருடன் இருக்கும் போது விரதம் இருப்பது புண்ணியமில்லை. கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். கணவரை நினைத்து.
ஆண்கள் விரதம் இருப்பது அவசியம்
ஆண்கள் தாய் தந்தை இருக்கும் போது இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியதில்லை ஆனால் தாய் அல்லது தந்தை ஒருவர் இல்லையென்றாலும் இருவரும் இல்லையென்றாலும் இந்த அமாவாசை விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
Mahalaya Amavasya : மஹாளய பட்ச வழிபாடு எந்த நாளில் என்ன பலன்?
அமாவாசை நாளில் விரதம் இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆசியை பரிபூரணமாக பெற அவர்களை பசியோடு வைத்திருக்க கூடாது. அன்றைய நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், வழிபாடு, அன்னதானம், பசுவுக்கு அகத்திக்கீரை, ஆடை தானம், காலணி, குடைகள் போன்றவற்றை கொடுக்கலாம். அப்படியே கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றுவதும் நல்லது.
இதன் மூலம் வழிவழியாய் பிள்ளைகளும் நல்ல பலனை பெறுவார்கள். நாளை மகாளாய அமாவாசை மறந்துவிடாதீர்கள்.