இறைவனிடம் சந்தோஷத்தை கேட்டால் சங்கடமில்லாமல் கிடைக்குமா?

By Dinesh TG  |  First Published Sep 23, 2022, 3:30 PM IST

எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்திரு. எந்த கஷ்டத்தையும் தந்துவிடாதே என்று இறைவனிடம் வேண்டுவது இயல்புதான். ஆனால் மற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நான் மட்டும் எப்போதும் ராஜா போல் உலா வர வேண்டும். உலகில் இருக்கும் அனைத்து சந்தோஷங்களும் எனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் இருக்கும் சந்தோஷமும் தொலைந்துவிடும்.   அதுவே என்னோடு என்னை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இறைவனின் பிரியத்துக்கு பாத்திரமாவார்கள். 
 


மார்க்கண்டேய புராணத்தில் சொல்லபட்ட கதை இது. ராஜ்ய வர்த்தனன் என்னும் அரசன் 7000 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். புரா ணக் கதைகளில் இதெல்லாம் சாத்தியமே என்பதால் ராஜாவின் ஆயுள் குறித்து பேச வேண்டியதில்லை . கதையை மட்டும் கவனியுங்கள். 

ஒருமுறை அரசர் ராஜ்யவர்த்தனன் தலையில் எண்ணெய் தேய்த்துக்குளிக்க அமர்ந்தார். அவரது மனைவி அரசனுக்கு எண்ணெய் தேய்க்கும் போது முடி ஒன்று நரைத்ததைக் கண்டு  பதறினாள்.  துக்கள் தாங்காமல் அழுதாள். என்னவாயிற்று தேவி என்றான் அரசன் தாங்கள் கூந்தலில் ஒரு முடி நரைத்துவிட்டது. அதனால் தங்களுக்கு வயசாகி விட்டது என்று அழுதா ள்.  உடனே ராஜா அதனாலென்ன? யமதர்மன் என்னை அழை த்துக்கொள்ளும் நேரம் வந்துவி ட்டது என்று நி னைக்கிறேன் என்றவன் துறவறம் மேற்கொள்வதாக கூறினான். 

Tap to resize

Latest Videos

உங்களை விடுத்து நான் மட்டும் இங்கு இருப்பேனே நானும் உங்களுடன் வருவதே தர்மம். என்னையும் கூட்டி செல்லுங்கள் என்றாள்.  இருவரும் இணைந்து சென்றால் பிறகு நாட்டை யார் காப்பாற்றுவது என்று பதறினார்கள் மந்திரி பெருமக்கள். மேலும் அவர்களது மக்கள் சரி உங்கள் விருப்பப்படியே ஆகட்டும் ஆனால் நாங்கள் திரும்பி வரும் வரை நீங்கள் துறவறம் மேற்கொள்ள வேண்டாம். நாங்கள் வந்து உங்களை வழியனுப்பி வைக்கிறோம் என்றனர். 

சொன்னபடி காட்டுக்குள் சென்று சூரியபகவானின் ஆலயத்துக்கு சென்று தவம் செய்ய தொடங்கினார்கள். காலங்கள் கடந்தது வருடங்கள் சென்றது. சூரிய பகவான் அவர்கள் முன்பு தோன்றினார். என்ன வரம் வேண்டும் என்றார். அவர்கள் எங்களுக்கு எதுவும் வேண்டாம். ஆனால் எங்கள் அரசர் இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்றார்கள். அப்படியே உண்டாகட்டும் என்றார்.

கருப்பு கயிறு கட்டுவதில் இருக்கும் அறிவியல் உண்மை!!

மக்கள் அரண்மனைக்கு திரும்பி அரசரிடம்  மகி ழ்வோடு நடந்ததைக் கூறினார்கள். ஆனால் அரசரின் முகத்தில் இம்மியளவும் மகிழ்ச்சி இல்லை. மாறாக துக்கம் இருந்தது. அரசியார் காரணம் கேட்ட போது நீயும் மக்களும் இல்லாமல் நான் மட்டும் வாழ்ந்து என்ன செய்துவிட போகிறேன் என்று கவலை பட்டார். 

 உடனே ராணியார் அப்படியெனில் நாம் சூரியபகவானிடம் சென்று வரம் கேட்போம் என்றாள். சரி என்று கிளம்பினான் அரசன். பிறகு அரசனும் அரசியாரும் சூரிய பகவானை நினைத்து தவம் புரிந்தார்கள். அவர்கள் தவத்தை மெச்சிய சூரிய பகவானிடம் அரசனும் அரசியும் நாட்டில் அனைவருமே 10 ஆயிரம் ஆண்டுகள் வாழ வரமளிக்க வேண்டினார்கள்.

Bad Dreams : கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க இந்த சின்ன பரிகாரம் செய்யுங்க!

எப்போது  மக்களின் மகிழ்ச்சி உன்னுடையது என்று நினைத்தாயோ அப்போதே நான் உனக்கு வரம் தர முடிவு செய்துவிட்டேன் உன் மக்களோடு மகிழ்ச்சியாக வாழ் என்று மறைந்தார். ராஜ்யவர்த்தன் மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து சொர்க்கலோகம் சென்றான்.  அதனால் உங்கள் சந்தோஷம் மட்டும் அல்லாமல் மற்றவர்கள் சந்தோஷத்துக்கும் முக்கியம் கொடுங்கள்.  இறைவன் உங்களை இன்னும் மகிழ்ச்சியாக வைத்துகொள்வான். 

click me!