யாருக்கு சர்ப்ப தோஷம் தாக்கும்.. அதற்கான பரிகாரங்கள் என்ன?

Published : Sep 26, 2022, 04:06 PM IST
யாருக்கு சர்ப்ப தோஷம் தாக்கும்.. அதற்கான பரிகாரங்கள் என்ன?

சுருக்கம்

 ஜாதகத்தில் தோஷம் என்று சொல்கிறார்களே. அது உண்மையா. அதிலும் செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம் என்று பல தோஷங்களின் தாக்கத்தால் அதற்கேற்ப தடைகளும் வருவதாக சொல்வதுண்டு.  

அப்படி ஒன்று  சர்ப்ப தோஷம். இது  குறித்த சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது.  சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்ற வார்த்தையை தற்காலத்தில்  அடிக்கடி கேட்க முடிகிறது. “நெடுநாட்களாகத் திருமணம் தடைபட்டு வருகிறதா, திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா,  சர்ப்பதோஷம் ஆக இருக்கும், போய் பரிகாரம் செஞ்சா எல்லாம் சரியாகிவிடும்”, என்று ஜோதிடர்கள் சொல்லி வந்த காலம்போய்,  தற்காலத்தில் சாதாரண மக்களே இந்த பரிகாரம் குறித்து பேசும் அளவிற்கு சர்ப்ப தோஷம் என்ற சொல் மிகவும் பிரபலமாகிவிட்டது.

சர்ப்ப தோஷம் வருவதற்கு சர்ப்பங்கள் ஒருவகையில் காரணமாக இருந்தாலும் வேறு சில காரணங்களும் இருக்கதான் செய்கிறது. சர்ப்பங்களை கொன்றவர்களுக்கும், இறை தேடி செல்லும் சர்பத்தை துன்புறுத்தியவர்களுக்கும், ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்திருக்கும் சமயத்தில் அதை துன்புறுத்தியவர்களுக்கும், பாம்பு தன் குட்டிகளோடு இருக்கும் சமயத்தில் அதை துன்புறுத்தியவர்களுக்கும் சர்ப்பதோஷம் வர வாய்ப்புகள் அதிகம்.

அதே நேரத்தில் அடுத்தவரின் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கும், கெடுதல்கள் செய்து பிறரின் வருமானத்தை தடுப்பவர்களுக்கும், அடுத்தவர் குடும்ப பிரச்னையில் தலையிட்டு சிறிய பிரச்னையை பெரியதாக்கி குடும்பத்தையே பிரித்தவர்களுக்கும், வார்த்தையினால் அடுத்தவர்களை எப்போதும் புண்படுத்துபவர்களுக்கும் சர்ப்பதோஷம் வர வாய்ப்புகள் அதிகம்.

அதிலும் சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டு. சர்ப தோஷம் என்பது என்னவென்றால் லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. பிறகு 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம். ராசிக்கும் இதுபோல் இருந்தால் அதுவும் சர்ப தோஷம். ராகு, கேது தவிர எல்லா கிரகங்களும் அடங்கிவிடுகிறதென்றால் அதற்குப் பெயர் கால சர்ப தோஷம்.

Bad Dreams : கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க இந்த சின்ன பரிகாரம் செய்யுங்க!

சர்ப தோஷம் என்பது ஒருவரை தாக்கினால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷயத்திற்கு சர்ப தோஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம்.

இறைவனிடம் சந்தோஷத்தை கேட்டால் சங்கடமில்லாமல் கிடைக்குமா?

இதற்காக பரிகாரங்களும் செய்யலாம். ராகு காயத்திரி மந்திரம் மற்றும் கேது காயத்திரி மந்திரம் ஆகிய இரண்டையும் தினமும் ஜெபிப்பதன் மூலம் சர்ப்ப தோஷம் அகலும். கும்பகோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம் கோவிலிற்கு சென்று வந்தாலும், திருப்பதி அருகே இருக்கும் காளஹஸ்தி கோயிலிற்கு சென்று வந்தாலும் சர்ப்ப தோஷம் அகலும். தான் யார் என்பதையே அறியாமல் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு மனதார உதவுவதன் மூலம் சர்ப்ப தோஷம் அகலும். சர்ப்பங்களை வழிபடுவதன் மூலம் சர்ப்ப தோஷம் அகலும்.

PREV
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!