ராம் லல்லாவின் சிலையை வடிவமைக்க கிருஷ்ண ஷிலா கல்லைப் பயன்படுத்தியது, தலைசிறந்த சிலையை உருவாக்க உதவியது மட்டுமல்லாமல், கர்நாடகாவின் செழுமையான கலை பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், எச்டி கோட் தாலுகாவில் உள்ள புஜ்ஜேகவுடனபுரா கிராமத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ராம் லல்லா சிலையை உருவாக்கி இருக்கிறார்.
200 கிலோ எடையுள்ள இந்த சிலை, குழந்தை ராமர் 5 வயது சிறுவனாக புன்னகையுடன் நிற்பது போல் வடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண ஷிலா கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது.
இது குறித்துக் கூறும் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராம் லல்லாவின் சிலையைச் செய்யும் பணி மூன்று சிற்பிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் இருந்து அருண் யோகிராஜ் செய்த சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
51 அங்குல சிலை, எச்டி கோட் மற்றும் மைசூர் மாவட்டங்களில் ஏராளமாக உள்ள கிருஷ்ண ஷிலா கல்லில் இருந்து செதுக்கப்பட்டுள்ளது. கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்தக் கல், கிருஷ்ணரின் நிறத்தைப் போலவே இருப்பதால், "கிருஷ்ணஷிலா" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இனி ராம் லல்லா இல்லை... அயோத்தி ராமருக்கு சூட்டப்பட்ட புதிய பெயர் 'பாலக் ராம்'!
கால்சைட்டை அதிகம் கொண்ட இந்தக் கல் சிற்பிகள் சிலை வடிக்கப் பொருத்தமானது. சிக்கலான வடிவங்களையும் சிறப்பாகச் செதுக்க உதவுகிறது. செதுக்கப்பட்ட பின் மென்மையான பகுதிகள்கூட 2-3 ஆண்டுகளில் படிப்படியாக கெட்டியாகிவிடும் என்பது இந்தக் கல்லின் விசேஷ அம்சம் ஆகும்.
ராம் லல்லாவின் சிலையை வடிவமைக்க கிருஷ்ண ஷிலா கல்லைப் பயன்படுத்தியது, தலைசிறந்த சிலையை உருவாக்க உதவியது மட்டுமல்லாமல், கர்நாடகாவின் செழுமையான கலை பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அயோத்தி ராமர் கோயிலின் கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் சிலை உருவாகியுள்ளது.
மைசூர் நகருக்கு அருகில் கிருஷ்ணா சிலா கல் ஏராளமாகக் படிவுகள் கிடைப்பதால், அப்பகுதி சிலை செய்வதற்கான முக்கியமான மையமாக இருந்துவருகிறது. அந்தக் கல்லை பயன்படுத்தி ராம் லல்லா சிலையை உருவாக்க அருண் யோகிராஜ் 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேதார்நாத்தில் 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலை மற்றும் டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் உள்ள 30 அடி சுபாஷ் சந்திர போஸின் சிலையும் அருண் யோகிராஜ் செதுக்கிய புகழ்பெற்ற சிற்பங்கள் ஆகும்.
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சீதனத்தை அயோத்தி ராமர் பாதத்தில் வைத்து வழிபட்ட பிரதமர் மோடி