அயோத்திக்கு வந்த ஹனுமான்.. ராமர் உற்சவர் சிலைக்கு அருகில் சென்ற குரங்கு செய்த செயல்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!

By Raghupati RFirst Published Jan 24, 2024, 12:02 PM IST
Highlights

செவ்வாய்கிழமை மாலை கருவறைக்குள் நுழைந்த குரங்கு, ராமர் உற்சவர் சிலைக்கு அருகில் சென்றதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தெரிவித்துள்ளது.

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் (ஸ்ரீ ராம் ஜென்மபூமி) கோவிலின் கருவறையில் உள்ள ராமர் உற்சவர் சிலைக்கு செவ்வாய்கிழமை இரவு ஒரு குரங்கு அழகான அத்தியாயத்தில் சென்றதாக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் அறக்கட்டளை இந்த நிகழ்வைப் பற்றி தெரிவித்துள்ளதாவது, “ஒரு குரங்கு தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்து உற்சவர் சிலையை நெருங்கியது. இதை கவனித்த பாதுகாப்பு ஊழியர்கள், குரங்கு சிலையை தரையில் வீழ்த்திவிடுமோ என்ற அச்சத்தில் விரைந்தனர்.

Latest Videos

“போலீசார் குரங்கை நோக்கி ஓடியவுடன், குரங்கு அமைதியாக வடக்கு வாயிலை நோக்கி ஓடியது. கேட் மூடப்பட்டதால், கிழக்கு நோக்கி நகர்ந்து, கூட்டத்தை கடந்து, யாருக்கும் சிரமம் ஏற்படாமல், கிழக்கு வாசல் வழியாக வெளியே சென்றார். எங்களுக்கு ஹனுமான் ஜியே ராம்லாலாவைப் பார்க்க வந்ததைப் போல இருக்கிறது என்று பாதுகாப்புப் பணியாளர்கள் கூறுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

आज श्री रामजन्मभूमि मंदिर में हुई एक सुंदर घटना का वर्णन:

आज सायंकाल लगभग 5:50 बजे एक बंदर दक्षिणी द्वार से गूढ़ मंडप से होते हुए गर्भगृह में प्रवेश करके उत्सव मूर्ति के
पास तक पहुंचा। बाहर तैनात सुरक्षाकर्मियों ने देखा, वे बन्दर की ओर यह सोच कर भागे कि कहीं यह बन्दर उत्सव…

— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth)

இச்சம்பவம் அயோத்தியில் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரமாண்ட அயோத்தி கோவிலின் ‘பிரான் பிரதிஷ்டா’ விழா பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.

ராமர் கோயிலை முதலில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்தபோது, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர். தொடர்ந்து அயோத்தியில் பக்தர்கள் குழந்தை ராமரை வணங்கி வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ராமர் படம் போட்ட புதிய 500 ரூபாய் நோட்டு - இணையத்தில் வைரல்.. உண்மையா? பொய்யா? முழு விபரம் இதோ!

click me!