ஆவணி அவிட்டம் 2024 எப்போது? அதன் முக்கியத்துவமும், சடங்கு முறைகளும் இதோ!

Avani Avittam 2024 :ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சடங்கு முறைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.


ஆவணி அவிட்டம் என்பது 'உபகர்மம்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஆரம்பம் என்று அர்த்தம். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிராமண சமூகத்தின் குறிப்பிடத்தக்க சடங்கு ஆகும். இது பாரம்பரிய இந்து நாட்காட்டியின் படியில் ஷ்ரவண பூர்ணிமா அதாவது, முழு நிலவு நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. 

ஆவணி அவிட்டம் என்றால் என்ன?

Latest Videos

ஆவணி அவிட்டம் என்று சொல் தமிழ் மாதத்தை குறிக்கிறது மற்றும் அவிட்டம் 27 நட்சத்திரங்களில் ஒன்றாகும். மேலும் எல்லா பிராமண சமூகங்கள் ஆவணி அவிட்டம் சடங்கிய முழு அர்ப்பணிப்புடன் பாக்தியுடனும் கடைபிடிக்கின்றன. குறிப்பாக எஜுர் வேத பிராமணர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஆவணி அவிட்டத்தில் பிராமணர்களுக்கு ஒரு புனித நூல் வழங்கப்படுகிறது மற்றும் மூன்றாவது கண், அதாவது ஞானத்தின் கண் திறக்கும் என்று நம்பப்படுகிறது. 

இதையும் படிங்க:  ஆவணி அவிட்டம் என்றாம் என்ன? துன்பம் விலகி வீட்டில் ஆனந்தம் பொங்க வைக்கும் வழிபாடு!!

ஆவணி அவிட்டத்தின் சடங்குகள்:

ஆவணி அவிட்டம் நாளின் கடந்த வருடத்தில் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு புனித சபதம் எடுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் புனித மந்திரங்கள் உச்சரிக்கப்பர். பிராமணர்கள் சூரிய உதயத்தில் இருந்து புனித நீராடுவார்கள். ஆவணி அவிட்டம் அன்று பிராமணர்கள் ஜனேயு அல்லது ய்ஜ்பவித் எனப்படும் புதிய புனித நூலை அணிவார்கள் . இது ஆவணி அவிட்டத்தின் மிக முக்கியமான சடங்கு மற்றும் இந்த நேரத்தில் வேத மந்திரங்கள் உச்சரிக்கப்படும் இது பொதுவாக ஒரு நதி அல்லது குலத்தின் கரையில் நடத்தப்படும். புதிய நூல் அணிந்த பிறகு பழையது ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கும் வகையில் நிராகரிக்கப்படுகிறது.

2024 ஆவணி அவிட்டம் தேதி மற்றும் நேரங்கள்:

இந்தாண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வருகிறது.

இதையும் படிங்க:  இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? அதிஷ்டத்தை அள்ளி கொடுக்குமா?

ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவம்:

ஆவணி அவிட்டம் வேதம் கற்கும் புதிய தொடக்கத்தை குறிக்கிறது. இந்து புராணங்களில் இந்த நாளில் விஷ்ணு பகவான் ஹயக்ரீவராக அறிவின் கடவுளாக அவதரித்ததால், இந்த நாள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது கொண்டாடப்படுகிறது. ஹயக்ரீவர் பிரம்ம தேவனுக்கு வேதங்களில் மீண்டும் நிலை நாட்டியவர் இந்த நாள் ஹயக்ரீவர் கொண்டாடப்படுகிறது. 

ஆவணி அவிட்டம் யஜுர்,சாம மற்றும் ரிக் வேத பிராமணர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மீக அறிவுக்காகவும், முன்னோர்கள் வாழ்ந்ததற்காகவும் ரிஷிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜபம் கொண்டாடப்படுகிறது.

click me!