வருமானத்தை அதிகரிக்கவும் பணப்புழக்கத்தை உருவாக்கவும் ஒரு எளிய பரிகாரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, வரவை விட செலவு அதிகமாகி கொண்டே வருகிறது, கொஞ்சம் கூட பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. ஏற்கனவே பணப்பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில், தேவையில்லாத வீண் விரயம் ஏற்படும். இதனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் வெளியிலிருந்து கடன் வாங்கும் சூழல் ஏற்படும். இது குடும்பத்தின் நிதி நிலையை மேலும் மோசமாக்கும். ஆனால் பணத்தை இரட்டிப்பாக்க ஒரு எளிய பரிகாரம் உள்ளது. ஆம். இதன் மூலம் உங்கள் வருமானம் அதிகரிப்பதுடன், வீண் விரயங்களும் குறையும். இந்த எளிய பரிகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு செம்பருத்தி பூ மற்றும் ஒரு சொம்பு இருந்தால் போதும் இந்த பரிகாரத்தை செய்யலாம். காப்பர் சொம்பை பயன்படுத்தினால் இந்த பரிகாரத்தின் பலன்கள் பல மடங்கு பெருகும். தினமும் இந்த சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு செம்பருத்தி மொட்டை வைக்க வேண்டும். அதை ஒரு தட்டு போட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்து குளித்துவிட்டு , பூஜை அறையில் உள்ள சொம்பில் உள்ள பூவை எடுத்து, தண்ணீரை உதறிவிட்டு, மகாலட்சுமி தாயார், உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தின் என ஏதேனும் ஒரு படத்தின் அருகே அந்த பூவை வைக்க வேண்டும்.
பிறகு மனதார பிரார்த்தனை செய்துவிட்டு, அந்த தண்ணீரை குடித்துவிட வேண்டும். அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், தடைகள் நீங்கி வருமானம் பெருகும். நீங்கள் ஏதேனும் தொழில் செய்து வந்தால், வியாபாரம் பெருகும். பணியாளர்கள் என்றால் சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் வருமானம் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் அதிகரிக்கும்.
எனினும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. மற்றபடி இதைச் செய்ய எந்த நிபந்தனையும் இல்லை. அசைவ உணவுகள் சாப்பிடும் நாட்களிலும் செய்யலாம். ஏனென்றால் நீங்கள் மறுநாள் காலையில் குளித்துவிட்டு தான் இந்த பரிகாரத்தை செய்யப்போகிறீர்கள். அதனால் அசைவம் சாப்பிடுவதில் தவறில்லை. மேலும் பிரம்ம முகூர்த்தத்தின் போது தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தூங்கி எழுந்ததும் குளித்துவிட்டு செய்தால் போதும்.
ஒருமுறை இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்க! நீங்க நினைத்ததெல்லாம் நடக்கும்...!!