வைகாசி மாத அமாவாசை எப்போது? அன்றைய தினம் ஏன் முருகன் வழிபாடு அவசியம் என்ற முழுதகவல்கள்!!

By Ma riya  |  First Published May 18, 2023, 10:25 AM IST

வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று வழிபடும் முறை.. முருகன் வழிபாட்டின் நன்மைகள் முழுவிவரம்.. 


வைகாசி மாதத்தை வளங்களை அள்ளித் தரும் ’மாதவ மாதம்' எனவும், வைகாசம் எனவும் சொல்வார்கள். வைகாசியில் புனித நதியில் நீராடி விட்டு மகாவிஷ்ணுவிற்கு துளசி இலைகளை கொண்டு பூஜை செய்வோருக்கு நற்பேறு கிடைக்கும் என விஷ்ணு புராணம் எடுத்து கூறுகிறது. 

குலதெய்வத்தை வழிபட வேண்டிய மாதம் வைகாசி. இந்த மாதத்தில் குலதெய்வத்தை வேண்டி கும்பத்தை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி பிறக்கும் என்பது ஐதீகம். பல சிறப்புகள் கொண்ட வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோரை வழிபட்டால் சுபிட்சம் கிடைக்கும். 

Latest Videos

undefined

அமாவாசை வழிபாடு 

இந்துக்களுடைய வழிபாட்டு நாட்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அமாவாசை. இந்நாளில் முன்னோர் வழிபாடு, பித்ரு கடன் போன்றவை ஏற்ற நாளாகும். நாளை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். 

இதையும் படிங்க: பெண்கள் இந்த மந்திரம் உச்சரித்தால் தங்கம் தானாக தேடி வரும்!

வைகாசி அமாவாசை 

சித்திரை முடிந்து வைகாசி மாதத்தின் தொடக்கத்தில் வரும் இந்த அமாவாசை நாளை வெள்ளிக்கிழமை (மே.19) வருகிறது. இன்று (மே 18) இரவு 10.09 மணிக்கே அமாவாசை திதி தொடங்கி விடுகிறது. மே 19ஆம் தேதி இரவு 09.47 மணி வரை அமாவாசை திதி நீடிக்கும்.  

இந்த வைகாசியில் வரும் அமாவாசையின் மற்றொரு சிறப்பு, முருகனுக்கு உரிய கிருத்திகை நட்சத்திர நாளில் வருவது தான். இதன் காரணமாக முன்னோரின் ஆசி, அருளுடன் முருகனின் பூரண அருளையும் பெறலாம். அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்த பின் சிவன் கோயில் அல்லது முருகன் கோயில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. 

இந்நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்க முடியாத நபர்கள் வீட்டில் காகத்திற்கு கறுப்பு, வெள்ளை எள் கலந்த அன்னம் அளித்து பித்ரு வழிபாடு செய்யலாம். பசுவுக்கு பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் ஆகியவை கலந்து தானமாக வழங்கினால் கோமாதாவின் அருள் நமக்கு கிடைத்து, வீட்டில் செல்வம் பெருகும்

மே மாதம் கிருத்திகை நாளில் வரும் அமாவாசை அன்று வழிபாடு செய்தால் நீண்ட ஆயுள், செல்வ வளம், குழந்தை பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். 

இதையும் படிங்க: என்னது பறவைக்கு உணவு கொடுத்தால் புது வீடு வாங்கலாமா?

click me!