
Do children need a separate room to sleep : பொதுவாகவே குழந்தைகள் பிறந்தது முதல் தாயின் அரவணைப்பில் தான் தூங்குவது வழக்கம். அம்மாவின் வாசனை, தொடுதல் மூலமாக அம்மாவை அறிந்து அவளது அமைப்பில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து தூங்குகிறார்கள். சில தாய்மார்கள் தங்கள் குழந்தையை கைக்கெட்டும் தூரத்தில் தொட்டில் அல்லது தனி படுக்கையில் தூங்க வைக்கிறார்கள். அதுவே சற்று வளர்ந்த மற்றும் விபரம் தெரிந்த குழந்தைகளை தனி அறையில் கண்டிப்பாக தூங்க வைக்க வேண்டும்.
ஆனால், எந்த வயதில் இருந்து குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்க வேண்டும் என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உண்டு. இன்னும் சில பெற்றோரோ குழந்தைகளை தனி அறையில் தூங்கு வைப்பதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் கூட இருப்பார்கள். எனவே குழந்தைகளை தனி அறையில் எந்த வயதில் இருந்து தூங்க வைக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் ஆரம்பத்தில் இருந்து பெற்றோருடன் தூங்குவதை பழகி இருப்பதால் தனியறையில் தூங்குவதில் மிகவும் சிரமமாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்குள் பயமும் இருக்கும். ஆனால், குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்கும் போது அவர்கள் உணர்ச்சி ரீதியாக வலுப்படுவார்கள் மற்றும் அவர்கள் மனதில் இருக்கும் பயமும் நீங்கும். இதனால் அவர்கள் பெற்றோரை சார்ந்து இல்லாமல் தனியாக வாழ கற்றுக் கொள்வார்கள்.
அதுவே குழந்தைக்கு எட்டு வயது தொடங்கியவுடன் அவர்களை தனி அறையில் தூங்க வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த வயதுக்கும் பிறகும் உங்கள் குழந்தை உங்களுடன் ஒரே அறையில் தூங்க வேண்டும் என்று அடம் பிடித்தால் அவர்களுக்கு மெதுவாக எடுத்து சொல்லி அவர்களை தனி அறையில் தூங்க வைக்க பழக்கப்படுத்துங்கள். இப்படி தனியாக தூங்க வைப்பதன் மூலம் குழந்தைகளுக்கு மனவளர்ச்சியையும் மற்றும் மனமுதிர்ச்சியையும் வழங்கும்.
குறிப்பு : சில குழந்தைகள் தனியாக தூங்க விரும்பினால் கூட பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் அது தவறு. பெற்றோர்கள் இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எதையும் தனித்து அவர்கள் செய்ய முடியாத நிலை வந்துவிடும். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர்களை கொஞ்சம் கவனமாக இருங்கள்