வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட இத்தனை நன்மைகள் கிடைக்குமா? முடிக்கு, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது!

Published : Jun 26, 2025, 11:19 PM IST
Curry Leaves

சுருக்கம்

Health Benefits Of Curry Leaves : தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

Health Benefits Of Curry Leaves : கறிவேப்பிலை பெரும்பாலும் எல்லாருடைய வீடுகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இலைகள் உணவை வாசனையாகவும், சுவையாகவும் ஆக்குகின்றன. ஆனால், உங்களுக்கு தெரியுமா கறிவேப்பிலை சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

கறிவேப்பிலை பயன்கள்:

இரும்பு, கொழுப்பு, புரதம், கால்சியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் இதில் உள்ளதால் உடல் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க இது பெரிது உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது முடி பிரச்சனை நீங்கி உச்சந்தலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இதற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் பல சிறந்த பலன்களை பெறலாம். எனவே, கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:

கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் டி ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

வயிற்று வலிக்கு அருமருந்து:

உங்களுக்கு வயிற்று வலி வந்தால் கறிவேப்பிலையை பயன்படுத்துங்கள். சிறிதளவு கருவேப்பிலையை இரண்டு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் பாதியாக வந்தவுடன் அதை வடிகட்டி அந்த நீரை குடித்தால் வயிற்று வலி, வாயு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பசி குறைவாக இருந்தாலும் இந்த நீரை குடிக்கலாம். அதுமட்டுமின்றி, வயிற்றுப் பிரச்சனைகள் போக்குவதிலும் இந்த நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது:

சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை ரொம்பவே நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக வைக்கலாம். சர்க்கரையை சமநிலையை வைத்திருந்தால், நமது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

எடை அதிகரிப்பை கட்டுப்படுத்துகிறது:

கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் எடை அதிகரிப்பை எளிதில் கட்டுப்படுத்தலாம். இந்த இலைகளை தினமும் உட்கொள்வதால் கொழுப்பு வேகமாக எரிந்து எடை குறையும். மேலும் இது வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலை நச்சுத்தன்மையாக்குகிறது.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும்:

உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தால், கறிவேப்பிலையை பயன்படுத்துங்கள். கறிவேப்பிலை சாப்பிடுவதனால் உச்சந்தையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் நீக்குவதற்கும், பொடுகு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கவும் இது உதவுகிறது. அதுபோல கறிவேப்பிலையை கூந்தலில் பயன்படுத்த, அதை அரைத்து ஹேர் மாஸ்காக பயன்படுத்துங்கள். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

புண்கள் மற்றும் பருக்களுக்கு நல்லது:

கறிவேப்பிலை தோல் பிரச்சினைகளுக்கு சிறந்தது. புண்கள் அல்லது பருக்கள் எங்காவது இருந்தால் கருவேப்பிலை அரைத்து அந்த பேஸ்ட்டை புண் அல்லது பருக்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மூன்றெழுத்து மந்திரத்திற்காக எச்சில் இலையை எடுத்த புஸ்ஸி! அடிமட்ட தொண்டனாய் மாறிய பொதுச்செயலாளர்!
20 வயசுலேயே வயசான மாதிரி தெரிறீங்களா? அப்போ இதுதான் காரணம்!