தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறு. அவர் சில கருத்துகளை தவிர்த்திருக்கலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், ஜிப்பர் மருத்துவமனையில் மருந்து இலவசமாக கிடைத்தாலும் சில மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவ சேவை செய்வதில் சிறந்த மருத்துவமனையாக உள்ளது. என்ன குறைபாடுகள் இருந்தாலும் தன்னை நேரடியாக சந்தித்து குறைகளை சொல்லலாம். தமிழக அரசு எதையுமே முறையாக செய்யாது என்பதற்கு உதாரணம் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். குளிப்பதற்கு, பயணிகள் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முடிந்தவுடன் தேசிய கீதம் இசைத்து விட்டு ஆளுநரை வழி அனுப்ப வேண்டும். இதுதான் முறை. ஆனால் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறு. அவர் சில கருத்துக்களை சொல்லி இருக்கக் கூடாது. தெலங்கானாவில் ஆளுநர் உரை வாசிக்க அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க விடாத அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வடஇந்தியாவில் மோடிக்கு தனி செல்வாக்கு உள்ளதை யாரும் மறுக்க முடியாது - கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் சரி, சட்டசபையில் ஆளுநர் உரையாக இருந்தாலும் எங்களை யாரும் எதுவும் கேட்கக்கூடாது. நாங்க செய்வது தான் சரி என்ற போக்கை ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை...அது வதந்தி! வதந்தீ! வதந்தீ! என்று மூன்று முறை குறிப்பிட்டார்.
மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே எந்த வித குறைபாடும் ஜிப்மரில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.